ஜிந்தகி

ஏன்டா மொதக் கொழந்த பையனாப் பொறந்ததும் அந்தப் பையனுக்கு துணியா -ங்கற இந்திப் பேர வச்சிட்ட. அடுத்த கொழந்த பொண்ணாப் பொறந்தா அதுக்கு என்ன பேரு வைக்கப் போற?

டேய் நா தீவிர சினிமா ரசிகன்னு உனக்கே தெரியும். சினிமாவ்லே என்ன பேரெல்லாம் பயன்படுத்தறாங்களோ அந்தப் பேருங்கள்ல நமக்குப் பிடிச்ச இந்திப் பேரா வைக்கறது தாண்டா தற்காலத் தமிழர் பண்பாடு. எனக்கு இந்திப் பெயர் மோகம் அதிகம். அதனால எனக்கு அடுத்து பெண் கொழந்த பொறந்தா அதுக்கு வாழ்க்கை-ன்னு அர்த்தம் வர்ற இந்திப் பேரா வைக்கப் போறண்டா.

சரி அது என்ன பேருன்னு சொல்லடா.


இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா நடிச்ச ஒரு படத்திலெ ஜிந்தகி -ன்னு பாட்டு பாடிட்டு போவாரு, ஜிந்தகி -ன்னா வாழ்க்கை -ன்னு அர்த்தமாம். அந்தப் பேரத் தான் எம் பொண்ணுக்கு வைக்கப் போறேன்.

========================
தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட வெட்கப்பட்டு இந்திப் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழும் பெற்றோர் சிந்திக்கவேண்டும். இந்தி தமிழைப் போல தனித்து இயங்கும் மொழி அல்ல. அது ஒரு கலப்பட மொழி. நம் தாய்த் திருநாட்டில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தம் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவது தான் நாம் நம் தாய் மொழிக்கும் தாய்க்கும் சேர்க்கும் பெருமை. இந்திக்காரர் ஒருவராவது தம் பிள்ளைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டியுள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

====================
जिन्दगी {jindagi} = LIFE(Noun)

எழுதியவர் : மலர் (1-Feb-16, 9:28 am)
பார்வை : 170

மேலே