என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இயற்றி, டி.ஜி. லிங்கப்பா இசையமைத்து, டி.எம். சௌந்தரராஜன் பாடிய ஓர் அருமையான பாடல். இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளியான எல்லோரும் இந்நாட்டு மன்னர். ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் இப்பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்கள். வெண்ணிலவைக் காதலிக்கு ஒப்பீடு செய்யும் மிக அற்புதமான பாடல். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் மகிழலாம்.

நான் பாளையங்கோட்டை புனித சவேரியர் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்பொழுது (1960 -61) விடுதியில் தேனிர் இடைவேளையில் இப்பாடல் ஒலி பரப்பப்படுவதுண்டு. காதலி என்றில்லாவிடாலும், மனதில் காதல் உணர்வோடும், கண்களில் கனவோடும் இப்பாடலை முணுமுணுப்பதுண்டு.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே? (என்னருமை)

கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த

வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே (என்னருமை)

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே

அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே (என்னருமை)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Feb-16, 9:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே