சின்ன அரும்பு மலரும் சோகம்

பங்காளிகள் (1961) என்ற திரைப்படத்தில் கவிஞர் அ.மருதகாசி இயற்றி, V தக்‌ஷிணாமூர்த்தி இசையமைத்து நடிகவேள் எம்.ஆர்.ராதா குழந்தையைப் பாட்டுப் பாடித் தாலாட்டும் காட்சி. திருச்சி லோகநாதன் பாடும் ஒரு இனிய பாடல். யு ட்யூபில் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

மரக் கிளையில் தொட்டில் கட்டி, மரத்தைச் சுற்றியுள்ள திண்டில் அமர்ந்தபடி எம்.ஆர்.ராதா சோகம் இழையோட குழந்தையைத் தாலாட்டுகிறார். நீ எங்கு இருந்த போதும் மாமனாகிய என் இதயம் உன்னை வாழ்த்தும்! தாய் அன்பு உன்னைக் காக்கும்! நீ அழுவதேனடா, உறங்கி அமைதி காணடா’ என்று குழந்தையை ஆறுதல் படுத்தி, தானும் ஆறுதல் கொள்கிறார்.

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் - நான்
களிக்கும் நாள் வரும் (சின்ன அரும்பு)

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும் - நான்
மகிழும் நாள் வரும் (சின்ன அரும்பு)

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும் (நீ எங்கு)
தாய் அன்பு உன்னைக் காக்கும்
தாய் அன்பு உன்னைக் காக்கும்
நீ அழுவதேனடா உறங்கி அமைதி காணடா
அழுவதேனடா அமைதி காணடா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 9:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே