திருப்பூவணம் பதிகம் 1

திருப்பூவணம் – பண்: காந்தார பஞ்சமம்

மேன்மை பொருந்திய திருப்பூவணம் தளத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியுள்ள பதினொரு தேவாரப் பதிகங்களுக்கும் அரும்பதவுரையுடன் பொருளுரையும் எழுதி, ஒவ்வொரு நாளும் ஒரு பதிகமும், பொருளும் இத்தளத்தில் தருகிறேன்.

“மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே” 1

பதவுரை:

போது அமர் பொழில் - மலர்கள் உள்ள சோலை
விரவலர் – பகையசுரர், அரணம் – கோட்டை

பொருளுரை:

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன்.
வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவன். துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதன் சிவபெருமான். இந்த நாதனை, சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-16, 10:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 181

சிறந்த கட்டுரைகள்

மேலே