திருப்பூவணம் பதிகம் 2

"வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை
ஆனநல் அருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே" 2

பதவுரை:

நல் அரு மறை - நல்ல அரிய வேதங்களாகிய - ருக், யசுர், சாமம் வேதம்.

அருமறை அங்கம் - சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்.

வானணி...பூவணம்” என்று பொருளுணர வேண்டும். வானத்தை அழகுசெய்கின்ற சந்திரமண்டலம் அளாவிய உச்சியையும்,

வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள அழகிய சோலைகளை உடைய திருப்பூவணம் என்றும் கொள்ள வேண்டும்.

பொருளுரை:

வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்தோங்கிய, வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள அழகிய சோலைகளை உடையது திருப்பூவணம்.

இத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றவன், ஆகச்சிறந்த நலம் தரும் நான்கு வேதங்களையும், அவற்றின் ’சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்’ என்ற ஆறு அங்கங்களையும் ஓதியருளிய ஞானவடிவினன் சிவபெருமான்.

இந்த ஞானவடிவான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-16, 11:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே