மாலவிகா நீ அழகுதான்

நீ அழகுதான்.... மாலவிகா !
____________________________

மாலவிகா ! இவள் ஒரு இளம் பெண்..... "பெயர் மட்டும் தான் அழாகாய் இருக்கிறது ! நான் தான் அழகா இல்லை " என்று அவள் பல முறை மனதிற்குள் நொந்ததுண்டு.... அவளுக்கு வயது 22... இந்த வயதில் எல்லா பெண்களுமே தான் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்துவர்... இது இயற்கை....

அவளுக்கு ஒன்றும் அங்கீனம் ஒன்றும் இல்லை... எல்லோர் முகத்திற்கும் ஒரு அழகு உண்டு.... எல்லாம் அவரவர் பார்க்கும் பார்வையில் உள்ளது...

"என்ன பண்றே மாலவிகா?" அம்மா குரல் கேட்டு கையில் எடுத்த முக கிரீமை அப்படியே வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்...

"ஏய் !! இந்த வெண்டைக்காயை கட் பண்ணு.... எப்ப பார்த்தாலும் கண்ணாடி முன்னாலே என்ன வேலை உனக்கு? " கொஞ்சம் கோபமாத்தான் சொன்னால் அம்மா.. மாளவிகாவின் புலம்பல் அம்மாவிற்கு பிடிப்பதில்லை.. எப்போதும் " நீ என்னை ஏன் இப்படி பெத்தே? " என்று கூறிக்கொண்டிருந்தால் அம்மா என்ன செய்வாள்? அம்மா சிறு வயது முதலே இவளுக்கு நிறைய சொல்லி விட்டாள்.. " இதோ பாருமா மாலவிகா! நீ அழகாதான் இருக்கே? ஏன் கவலை படறே... பாரு ராஜா மாதிரி மாப்பிள்ளை வருவான் உனக்கு " என்பாள்...

அம்மா சொல்ல , சொல்ல வெறுப்புதான் வரும் இவளுக்கு.... கருப்பாய் இருந்தாலும் ஒரு களை வேண்டும் என்பது இவளின் வாதம்...எனக்கே என்னை பார்க்க பிடிக்கலே... அப்போ வேற யாரு என்னை பார்பா?

இவள் குடும்பம் ஒன்றும் பெரிய வசதி இல்லை... அப்பா ஒரு அரசு ஊழியர்... வரும் சம்பளத்தில் குடும்பம் நடத்த தெரிந்தவள் அம்மா. இவளுக்கோ வேலைக்கு செல்ல விருப்பமே இல்லை... அழகே அதற்கு காரணம்....
உம! 4 அல்லது 5 பேர் பெண் பார்த்து விட்டு சென்றனர்... இவள் எதிர் பார்த்த மாதிரியே ஏதோ ஒரு காரணம் கூறி தட்டி கழித்தனர் மாப்பிள்ளை வீட்டார்...

இதோ, நாளை மறுநாள் ஆகாஷ் இவளை பெண் பார்க்க வருவதாய் தரகர் சொன்னார்.... இவள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாள்... ஆனால் அம்மாவோ " இந்த வரன் முடியும்னு தோணறது! " என்று அப்பாவிடம் கூறிக்கொண்டிருந்ததை கேட்டாள் இவள்... சிரிப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை மாலவிகாவிற்கு....

ஆகாஷ்! தனியார் கம்பனியில் நல்ல வேலை... ஒரு தம்பி... அவன் படித்துக்கொண்டிருக்கிறான்... அப்பா ரிடையர் ஆகிவிட்டார்..

மாப்பிள்ளை , பெண்ணிடம் பேசவேண்டும் என்றான்...

இருவரும் மொட்டைமாடியில் சந்தித்தனர்.... மாலவிகா தலை குனிந்துதான் இருந்தாள்... அவளுக்கு தாழ்வு மனப்பான்மை....

"எனக்கு உன்னை பார்த்ததுமே பிடித்து விட்டது.... நீ நடந்து வந்த விதம்... என் அம்மாவிடம் பேசிய பாங்கு எல்லாம் என்னை நெகிழவைத்தது.... உன்னால் என் குடும்பத்தை கட்டி காக்க முடியும் என நான் நம்புகிறேன்.. உன் விருப்பம் என்ன? " சற்றும் தயங்காமல் கேட்டான் ஆகாஷ்...

" நான் அழகா இல்லை... உங்களுக்கு பொருத்தமா இருக்கமாட்டேன்... " என்றாள் தயக்க குரலில்.... அவளின் குரல் இனிமையாய் ஒலித்தது ஆகாஷிற்கு....

"யார் சொன்னது நீ அழகில்லை என்று? என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நான் மனதில் கற்பனை செய்திருந்தேனோ அப்படி இருக்கிறாய்.... உன் முகம்?? அதை நீ சம்மதித்தவுடன் நான் இன்னும் மெருகேற்றுகிறேன் பார்... அழகு நம் மனதில் இருக்கிறது... பார்க்கும் பார்வையில் இருக்கிறது.... அவ்வளவுதான்..... "நான் அழகு என்று நினைத்து கண்ணாடியில் உன் முகத்தைப் பாரு... அதன் அழகை நீ ரசிப்பாய்.... ! " எனறான் மிகவும் அழகாக....

ஆச்சரியப் பட்டாள் மாலவிகா! " என்ன நான் அழகா! அதுவும் ஒரு ஹீரோ போல் உள்ள ஒருவர் என்னை பார்த்து.... " வெட்கத்தில் முதன் முதலாய் தலை குனிந்தாள்...

சிறிது நேரம் மௌனம்.... " யோசித்து பதிலை சொல்லு... ஒன்றும் அவசரம் இல்லை... " என்றான் மெல்லிய குரலில் ஆகாஷ்...

" சரி! " என்ற ஒரே வார்த்தை மட்டும் கூறி அவனுடன் கீழே சென்றாள்.

ஒரு 10 - 15 நிமிடங்களில் ஆகாஷ் மற்றும் அவன் குடும்பத்தினர் கிளம்பினர்.... எல்லோர் முகத்திலும் சந்தோஷ அலை மட்டும் தெரிந்தது மாலவிகாவிற்கு....

அவள் உடனே தன அறைக்கு சென்றாள்...

கண்ணாடியில் தன முகத்தைப் பார்த்தாள்... இப்பொழுது ஏனோ அது அழகாய் தெரிந்தது.....

நிறைய யோசித்தாள்.... " அம்மா எனக்கு ஆகாஷை பிடித்திருக்கு." என்றாள் தயக்கமின்றி.... இவளை கட்டிக்கொண்டாள் அம்மா... கண்ணில் ஆனந்தக் கண்ணீர்....

இரண்டு மாதங்களில் கல்யாணம் முடிந்தது....

நாள் செல்ல செல்ல மாலவிகாவின் முகம் சந்தோஷத்தில் மிளிர ஆரம்பித்தது..... ஆகாஷ் கூறியது உண்மை என உணர்ந்தாள்....

மற்றுமொரு அழகான கதையுடன்...மீண்டும் சந்திப்பேன்

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (7-Feb-16, 11:40 am)
பார்வை : 336

மேலே