சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நம்மையே மாற்றுவதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்

ஒரு காலத்தில் ஒரு வளமான நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஒரு நாள் அவர் தனது நாட்டிலுள்ள தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்பற்காக சென்றார். அவர் சென்ற பாதை மிகவும் மோசமானதாக இருந்தது. பல இடங்களில் நடந்தே செல்ல வேண்டியிருந்தது.அத்தகைய ஒரு நீண்ட தூர கடினமான பயணத்தை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.

பல நேரங்களில் கற்களும் முட்களும் நிறைந்த பாதைகளில் சென்றதால் அவருடைய கால் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு வலியால் துடித்தார். மக்களின் குறைகளைக் கேட்டுவிட்டு அரண்மனைக்கு திரும்பிய அரசர் அமைச்சரை அழைத்து உடனடியாக நாட்டிலுள்ள அனைத்து சாலைகளையும் தோல்களால் செய்யப்பட்ட சாலைகளாக மாற்றுவதற்கு கட்டளையிட்டர்.

அரச சபையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் நமது நாட்டிலுள்ள அனைத்து சாலைகளையும் விலங்குகளின் தோல்களில் செய்யவேண்டுமானால் கோடிக்கணக்கான பசுக்களின் தோல்கள் தேவைப்படும். எராளமான பணமும் செலவாகும்.

ஏராளமான பசுக்களை கொன்று பணத்தை விரையம் செய்வதை விட தங்கள் காலுக்கு ஒரு சிறிய துண்டு தோலால் செய்த காலணியை அணிந்து கொண்டாலோ அல்லது தங்கள் காலை சுற்றி ஒரு சிறிய துண்டு தோலால் போர்த்திக்கொண்டாலோ கற்களிடமிருந்தும் முட்களிடமிருந்தும் தங்கள் கால்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.

முதலில் அரசர் ஆச்சிரியத்தோடு அதிர்ச்சியுற்றாலும் பின்னர் புத்திசாலி அமைச்சரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு தோலினால் சாலை செய்வதற்க்கு பதில் காலணி செய்ய உத்தரவிட்டார்.

நாம் நடக்கும் பாதை பட்டு மெத்தை விரித்த பாதையல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதையே. இந்த உலகில் நாம் மகிழ்சியாக வாழ்வதற்க்கு நமக்கு பிடித்த மாதிரி இந்த உலகமே மாறவேண்டும் என எதிர்பார்க்காமல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நம்மையே மாற்றுவதற்க்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (7-Feb-16, 7:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1472

மேலே