விழி வாசல் அழகான மணி மண்டபம்

ஜெமினி கணேசன் – எம்.என்.ராஜம் நடித்து, விட்டலா ஆச்சாரி இயக்கத்தில் 1959 ல் வெளி வந்த திரைப் படம் பெண் குலத்தின் பொன் விளக்கு. கவிஞர் வில்லிபுத்தன் இயற்றி, மாஸ்டர் வேணு இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா பாடிய ’விழி வாசல் அழகான மணி மண்டபம்’ என்ற காதல் பாடல் ஒரு அருமையான பாடலாகும்.

திரைப்படத்தில் கலாவல்லி என்ற கதாபத்திரத்தில் சண்டித்தனமான பெண்ணாக நடிக்கும் எம்.என். ராஜத்துடன் காதல் கொண்டு பாட்டு வாத்தியாராக கோதண்டம் என்ற பெயருடன் நடிக்கும் ஜெமினி கணேசன் பகல் கனவு கண்டு பாடுவதாக அமைந்த பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலம்.

கணீரென்ற குரலில் சீர்காழி கோவிந்தராஜனும், இனிமையான குரலில் பி.சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். திரைப்படத்தில் பி.வி.நரசிம்ம பாரதி, ஸ்ரீரஞ்சனி, ஏ.கருணாநிதி, எம்.என்.நம்பியார், நாகேஷ் நடித்திருக்கிறார்கள். யு ட்யூபில் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

விழி வாசல் அழகான மணி மண்டபம்..
உன் விழி வாசல் அழகான மணி மண்டபம்..
மின்னல் விளையாடும் புதுப் பார்வை
உயிர் தாண்டவம்.. (விழி வாசல்)

வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..ஆ ஆ ஆ..
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே..
என்னை வரவேற்க வரும் இன்ப சாம்ராஜ்யமே..
விழி வாசல் அழகான மணி மண்டபம்..

புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..
வாச புது மாலை உனை நாடி வரும் தாரகை..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

புனலான தேன் கூடு பார் வெண்ணிலா..
புனலான தேன் கூடு பார் வெண்ணிலா..
வந்த பொழுதல்ல உன் பாடல் என் நெஞ்சிலே..
புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

செடியிலே பூவிருக்கு அழகாக..
உன் சிரிப்பிலே நான் இருக்கேன் உனக்காக..
கொடியிலே கோணலிருக்கு எதுக்காக.. – பூங்
கொடியிலே கோணலிருக்கு எதுக்காக..

பெண்கள் குணத்திலே நாணம் இருக்கு அதுக்காக..
நாணம்தானே பெண்களுக்கு நாணயம்..
இந்த நல்ல பண்பு கொண்ட பெண்கள் குடும்ப வாழ்வின் ஆலயம்..

ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்..- கலை
ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்.
தமிழ் வானில் ஆடும் தாரகை
நீ உலக மகா இலக்கியம்..

விழி வாசல் அழகான மணி மண்டபம்..
உன் புகழ் மாலை அமுதான கவி மாளிகை..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Feb-16, 10:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 258

மேலே