திருப்பூவணம் பதிகம் 7

"பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே" 7

பதவுரை:

மல்கு - அதிகமாதல், நிறைதல், செழித்தல்,
பாடல் ஆடலன் - பாடுதலோடு ஆடுபவன்,
மறை மல்கு பாடலன் – வேதங்களை அமர்ந்து பாடுபவன்

பொருளுரை:

பறையின் ஒலியும், முழவின் ஓசையும் பெருத்து முழங்கி ஒலிக்கப் பாடி ஆடுபவனும், அமைதி தவழும் சோலையையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுபவனும், நால்வேதங்களையும் சிறப்பாகப் பாடுபவனும், உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனும் ஆன சிவபெருமான்.

அப்பெருமானின் ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளைத் தொழும் அன்பர்களுக்குத் துன்பம் சிறிதும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-16, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே