செல்லக் கிளிகளாம் பள்ளியிலே

நண்பர் மு.ரா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க:

ராகம் தெரியவில்லை; தெரிந்து சொல்கிறேன்.

திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த எங்க மாமா (1970) என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் T.M.சௌந்தரராசன் பாடிய ஒரு அருமையான பாடல் ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை (என் பொன்மணிகள்)

கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா (கன்றின் குரலும்)

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா (என் பொன்மணிகள்)

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே (என் பொன்மணிகள்)

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன் (தந்தை ஒருவன்)

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வானவன் (என் பொன்மணிகள்)

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே (என் பொன்மணிகள்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-16, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 714

சிறந்த கட்டுரைகள்

மேலே