தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து21---ப்ரியா

ரியாவை வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டான் வசந்த்.....இனி இவளது கண்ணிலும் உதட்டிலும் சிறு புன்னகை கூட நாம் பார்க்கக்கூடாது...வலின்னா என்னவென்று புரியவைக்கணும் என்று நினைத்தவன்.... தன் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு தன் அறைக்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்கினான்.

பள்ளியில் படிக்கும் போதே தன் மனதுக்கு ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டான் வசந்த்....பள்ளி படிக்கும் போது உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அரட்டை அடிப்பது கேலி கிண்டல் என ஊதாரியாகவே இருந்தனர் ஆனால் வசந்த் எதையும் கண்டுகொள்ளாமல் தனியாகவே இருந்தான்.....நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் காதலி என அவர்கள் பொழுதை போக்கிக்கொண்டிருந்தனர்.ஆனால் இவன் படிப்பைத்தவிர வேறு ஒரு எண்ணத்தையும் மனதில் கொள்ளவில்லை.

இவனது இந்த செயலுக்கும் ஒரு காரணம் உள்ளது......இவன் அப்பா அம்மாவின் மரணம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் மிகப்பெரிய தொழிலதிபராகிய வசந்தின் அப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவரது நெருங்கிய நண்பனின் தங்கை....ஆனால் இந்த காதல் திருமண பயணம் சிறிது காலமே அமைதியாய் அழகாய் சென்றது....வசந்த் விபரம் அறியாத நாளிலேயே அவன் அம்மா இன்னொருவனை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இருவரின் வாழ்விலும் கேள்விக்குறியாய் ஆனது.......இடையில் பாவம் இந்த குழந்தை வசந்தும் மாட்டிக்கொண்டான்.

பார்க்கும் மக்களெல்லாம் முதுகுக்கு பின்னால் வசைபாட ஆரம்பித்துவிட்டனர்...வாழ்க்கையே வெறுத்துப்போன அப்பா சொத்துக்கள் அனைத்தையும் தன் மகன் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.....கணவனின் தற்கொலை மனைவின் மனதை எந்த அளவுக்கு பாதித்ததோ? தெரியவில்லை?ஒருவேளை உண்மைக்காதலின் காரணமோ தெரியவில்லை???அம்மாவும் தற்கொலை செய்து கொண்டார்.

வசந்தின் மாமா அவனை அவரது பாதுகாப்பில் வளர்த்து வந்தார்..விபரம் தெரிந்து உண்மைகளை அறிந்து கொண்ட பிறகு வசந்துக்கு இந்த வாழ்க்கையும் பணக்காரர்களின் அன்பும் அரவணைப்பும் துளியும் பிடிக்காமல் போனது அதில் பொய் உள்ளது என்று நம்பினான்.....தன் மன எண்ணத்தை மாமாவிடமே நேரடியாக சொல்லிவிட்டான் வசந்த்.

அவனது மனநிலையை புரிந்து கொண்ட அவனது மாமா அவனை அப்பவே ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார் அவனது முழு கவனமும் படிப்பில் மட்டுமே! பெண்களை ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டான்...."பெண்ணென்றாலே ஏமாற்றம் தான்" என மனதில் பதித்துக்கொண்டான்.ஆனாலும் அமைதியான நல்லக்குடும்பத்துப்பெண்களை பார்த்தால் மனதில் ஒரு சுகம் தொற்றிக்கொள்ளும்...தாயன்பு கிடைக்காதவனாயிற்றே அந்த ஏக்கம் சில பெண்களிடம் பல நேரங்களில் இவனுக்கு கிடைக்கும்.....அந்த வரிசையில் தான் ரியாவும் ஏமாற்றத்திற்கு முன்பு வரை......ஆனால் இப்பொழுது இவள் துரோகி ஆகிவிட்டாள்.....

அப்பாவின் கம்பெனிகள் எல்லாம் செயல்படாமல் இருக்க....தோட்டம் போன்றவற்றை மட்டும் நம்பிக்கையான ஒருவரிடம் முன்னதாகவே பொறுப்பைக்கொடுத்து விட்டார் அப்பா....அதில் தொழிலாளிகளுக்கு கொடுத்து போக மீதி பணம் அனைத்தையும் வங்கியில் போட்டு வைத்துக்கொள்ளும்படி சொல்லி வைத்திருக்கிறார் இன்னும் சில விஷயங்களையும் அவரிடம் சொல்லி பணப்பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார்............அந்த பணத்திலேயே இதுவரை தன் படிப்பை தொடர்ந்தான் வசந்த்.

வசந்த்க்கு எப்படியாவது முடங்கி கிடக்கும் அப்பாவின் நிறுவனத்தை விரிவுபடுத்தி பிறர் துணையின்றி முழுக்க முழுக்க நம் சொந்த உழைப்பால் முன்னுக்கு கொண்டு வரவேண்டுமென்ற ஆவேசம் இருந்தது அதில் உறுதியாய் இருந்தான்...கல்லூரியிலும் நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டான்.ஆனால் பெண் என்றாலே அவனுக்கு வெறுப்பாய் போனது.....!!

தன் அறை கதவை தட்டும் சத்தத்தில்.....பழைய சிந்தனையில் இருந்தவனின் நினைவுகள் கலைந்து போனது.....


தொடரும்....!!

எழுதியவர் : ப்ரியா (20-Feb-16, 2:32 pm)
பார்வை : 375

மேலே