ஏண்டா உனக்கு மட்டுந்தான் இந்திப் பேரு வைக்கத் தெரியுமா

டேய் பங்காளி நம்ம ரண்டு பேருக்கும் சம வயசு. உனக்கு எப்பிடியோ முறைப் பொண்ணு கெடச்சு மூணு வருசத்துக்கு முன்னாடியே கல்யாணமாகி ரண்டு வயசில ஒரு பெண் கொழந்தை இருக்குது. அந்தக் கொழந்தைக்கு அடிக்கடி செய்தித் தாள்கள்ல வர இந்திப் பேரான பிரேமலதா -ங்கற பேர வச்சிருக்க.

ஆமாண்டா பங்காளி உனக்குத் தான் பொண்ணு கெடைக்காம அலஞ்சு திரிஞ்சு கடைசில செய்தித்தாள்கள்ல வெளம்பரம் குடுத்து ஒரு தூரத்து ஊரு பொண்ண ஆறு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்ட.

ஆமாண்டா இப்ப என்னோட மனைவிக்கு மூணு மாசம்டா. என் மனைவிக்கு ஒரே பிரசவத்திலே மூணு கொழந்தைங்க பொறக்கணும் நம்ம தமிழக் கடவுள் பழனி முருகனுக்கு வேண்டிருக்கேண்டா. என்னோட வேண்டுதல் நெறைவேறுச்சினா பால்காவடி எடுத்துட்டு பழனிக்கு நம்ம ஊர்ல இருந்து நடைபயணமாப் போவண்டா. என் மனைவிக்கு மூணு பெண் கொழந்தைங்க பொறந்தா வருங்காலத்திலே அவுங்க கல்யாணம் பண்ணறப்ப வரதட்சண வாங்கியே கோடீஸ்வரன் ஆகிடுவண்டா. ஏன்னா இப்பவே பெண்கள் தொகை கொறஞ்சு நெறையப் பசங்க பொண்ணுக் கெடைக்காம அலையறானுக. வருங்காலத்திலே பொண்ணுக் கெடைக்காத ஆம்பளப் பசங்க எல்லாம் சந்நியாசி ஆகவேண்டியது தான். ஏண்டா பங்காளி உனக்கு மட்டுந்தா இந்திப் பேர உங் கொழந்தைக்கு வைக்கத் தெரியுமா?
எனக்கு பொறக்கப் போற மூணு கொழந்தைகளுக்கும் ஹேமலதா, கனகலதா, புஷ்பலதா - ன்னு இந்திப் பேருங்கள வைக்கப் போறண்டா.

அட பங்காளி நா பிரேமலதா-ங்கற பேர அர்த்தம் தெரிஞ்சுதாண்டா வச்சேன். இந்திப் பேருங்கள பிள்ளைகளுக்கு வைக்கறது தான் தற்காலத் தமிழர்களின் நாகரிகங்கறதாலே எம் பொண்ணுக்கு பிரேமலதாங்கற இந்திப் பேர வச்சண்டா பங்காளி. அந்தப் பேருக்கு அன்புக்கொடி-ன்னு அர்த்தண்டா. சரி நீ சொன்ன மூணு இந்திப் பேருங்களுக்கும் அர்த்தம் தெரியுமா?

அதப் பத்தி எனக்கு கவலை இல்லடா. நீ இந்திப் பேர வைக்கறபோது நான் இளிச்சவாயனா சும்மா இருக்க? அர்த்தம் தெரியுதோ இல்லையோ நா ஒரு முடிவு எடுத்தா அத மாத்திக்கமாட்டண்டா.

சரிடா. தற்கால தமிழர் நாகரிகப்படி இந்திப் பேருங்கள உன் வேண்டுதல்படி பொறக்கப்போற உன்னோட மூணு கொழந்தைங்களுக்கும் வச்சிருடா. இருந்தாலும் எனக்கு கொஞ்சம் இந்தி தெரியுங்கறதால அந்தப் பேருங்களுக்கான அர்த்தத்தைச் சொல்லறேன்.


சரி சொல்லுடா.

ஹேமலதா, கனகலதா. இந்த ரண்டு பேருங்களுக்கு தங்கக்கொடி-ன்னு அர்த்தம். புஷ்பலதா-ன்னா பூங்கொடி-ன்னுஅர்த்தம்.

ரொம்ப நன்றிடா பங்காளி

எழுதியவர் : மலர் (21-Feb-16, 9:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 225

மேலே