கண்ணன் பாட்டு - அதரம் மதுரம் வதனம் மதுரம்

கண்ணன் பாட்டு

வாணி ஜெயராம், யேசுத்தாஸ், பாம்பே ஜெயஸ்ரீ,எம்.எஸ் ஆகியோரின் குரலில் இனிமையே.
தமிழில் KRS என்பவர் பாடியுள்ளார்..

அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்


தமிழில்..

இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரா மைந்தா! எல்லாம் இனிதே!

இப்பாடல் தான் கேட்க கேட்க எவ்வளவு இனிமை.. ஒவ்வொரு வார்த்தையையும் இனிமை.. அத்துனையும் இனிமையே...

எழுதியவர் : படித்தது (24-Feb-16, 3:38 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 291

மேலே