மெல்ல சாகிறது சுயம்

சிறகுகளில்
சிலுவை அறைந்த
பறவை இது

ரசாயன வாடையில் தன்
ரசமிழந்த
காற்று இது

உதிக்கும் சூரியனோடு
சிரிக்கும் மலர்களோடு
இனிக்கும் நிலவோடு
இருக்க நேரமில்லை

அலாரங்களோடு
அலுத்துப் போன
வாழ்வு இது

அன்று
விடியலை எண்ணி
கண் அயர்ந்தேன்
இன்று
விடியாதே என
தவம் கிடக்கிறேன்

ரசனை அழிந்து போனது
ரசிக்க மறந்து
போனது
கவிதை கூட
தொலைவாய் ஓடி
போனது

மனதினுள் குமுறும்
எரிமலையில்
மெல்ல சாகிறது
எனது சுயம்
இனி இதுதான்
நிரந்தரமா
ஏனோ பெரும் பயம்

கடந்து போன
பேருந்தில்
இதுவும் கடந்து போகும்
என வசனம்

எழுதியவர் : கவியரசன் (28-Feb-16, 9:09 pm)
பார்வை : 140

மேலே