திருமணத்திற்கு முன்பே காதலிக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய சில விஷயங்கள்

திருமணத்திற்கு முன்பே காதலிக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய சில விஷயங்கள்

பொதுவாக பெண்களிடம் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது, அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளும் மனோபாவம் தானாக வந்துவிடும். ஆனால், காதல் திருமணத்தில் இது கொஞ்சம் குறைவு என்று தான் கூற வேண்டும்.

பல நாட்களாக அறிந்த நபர் என்பதால் முதல் நாளில் இருந்தே கணவன் மீது அதே அதிக அக்கறை இருக்கும், வெளிப்படையாக பேசுவார்கள் .

இதை புகுந்த வீட்டு ஆட்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என தெரியாது. எனவே, ஒருசில சூழல்களில், எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என காதலன் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சுயத்தை இழக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. ஆனால், இல்லறத்தின் நலனுக்காக விட்டுக்கொடுத்து போவது நல்லது தானே...

நிச்சயமாக உங்கள் குடும்பத்தினர் மற்றும் அவர்களது குணாதிசயங்கள், மனோபாவம் போன்றவற்றை பற்றி உங்கள் காதலிக்கு நீங்கள் முன்னரே அறிவித்துவிட வேண்டும். ஏனெனில், இது பின்னாட்களில் ஏற்படும் பல சண்டைகளை ஏற்படாமல் தடுக்க உதவும்.

காதலிக்கும் போது பெரும்பாலும் நாம் பொருளாதாரத்தை பற்றி பேசியிருக்க மாட்டோம். மேலும், காதலியை சந்தோசப்படுத்தவாவது கண்டிப்பாக பரிசுகள் கொடுத்துக் கொண்டே தான் இருப்போம். ஆனால், திருமணத்திற்கு பிறகு இது குறைய வாய்ப்புகள் இருக்கிறது.

பரிசுகள் மட்டுமின்றி, உங்கள் குடும்ப நிலை என்ன, அதற்கு ஏற்றார் போல எப்படி செலவு செய்ய வேண்டும் என்றும் முன்னரே கூறிவிடுவது நல்லது. ஏனெனில், பெண்களின் மனதில் ஆசை வளர்ந்த பிறகு தடுப்பது மிகவும் கடினம்.

பொதுவாக பெண்கள் தான் உறவுகளை வலுப்படுத்துவார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற மாற்று எண்ணங்கள் இருக்கும். இரண்டையும் ஒன்றாக பார்ப்பது சற்று கடினம். அம்மா சொல்லும் அதே அறிவுரை மாமியார் சொன்னால் கோபம் வரும். இதை சரியாக கையாள கற்றுக் கொடுக்க வேண்டும்.

சிக்கனுமும், சேமிப்பும் பெண்களுக்கு கைவந்த கலை. ஆனால், இன்னமும் மளிகை டப்பாக்களுக்குள் சேமிப்பதற்கு பதிலாக, வங்கியில் எவ்வாறு சேமிக்கலாம். அதன் மூலம் எப்படி எல்லாம் பயன் பெறலாம் என்று கற்றுக் கொடுங்கள். இது, குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

பெண்கள் கண்டிப்பாக ஒரு வயதுக்கு மேல் காத்திருக்க முடியாது. அதற்கு அவர்களது மனதும், உடலும் இரண்டும் ஒத்துழைக்காது. ஆயினும், உங்கள் வாழ்வின் நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முழுமையாக அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

திருமணத்திற்கு பிறகும் ஓர் சூழ்நிலையை நாம் பழையபடி கையாள முடியாது. உறவுகளுக்காக சிலவற்றை நாம் பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்.

பெண்களுக்கு வெடுக்கு, வெடுக்கென்று கோபத்தில் சில வார்த்தைகள் வெளிவந்துவிடும். ஓர் காதலனாக நீங்கள் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்கள் வீட்டு ஆட்களும் அப்படி லேசாக எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்க கூடாது. எனவே, உங்கள் வீட்டாரிடம் எப்படி பேச வேண்டும் என்று முன்னரே கூறிவிடுங்கள்.

இயல்பாக இருப்பினும் கூட தவறை திருத்திக் கொள்வதும், ஒருசில விஷயங்களுக்கு, குடும்பத்தின் நலனுக்காக சின்ன, சின்ன மாற்றங்களும் செய்துக் கொள்வது தவறல்ல.

எழுதியவர் : படித்தது (5-Mar-16, 2:55 pm)
பார்வை : 960

சிறந்த கட்டுரைகள்

மேலே