பூபாளம்

'பூபாளம்' கர்நாடக இசையில் பாடும் இராகங்களில் ஒன்று.
இதற்கு புள்ளாளம், பூபாலம் என்றும் பெயர்கள் உண்டு

ஆண் பால் ராகமான பூபாளம் காலையில் பாடக் கூடிய மங்களகரமான இராகம் ஆகும்.
பண்டைத்தமிழ் இசையில் இந்த இராகத்திற்கு புறநீர்மைப் பண் என்று பெயர்.
இந்துஸ்தானி இசையில் இந்த இராகத்திற்கு பூபாலி, பூபாள தோடி என்று பெயர்.

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள், இயற்றியவர்களின் பெயர்கள்:

1. தேவாரம்: மங்கையற்கரசி - திருஞானசம்பந்தர்.
2. தினமிதே நற்றினமே - பாபநாசம் சிவன்.
3. சக்தி தனக்கே - சுப்பிரமணிய பாரதி.
4. திருப்பள்ளி எழுந்தருள் - கவிகுஞ்சர பாரதி
5. தீன ஜனவான – தியாகராஜர்
6. சதாசலேச்வர – முத்துசுவாமி தீட்சிதர்
7. அஷ்டபதி: மாமியஞ்சலி – ஜெயதேவர்

பூபாளம் ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:

1. பாபநாசம் சிவன் எழுதி, M.K.தியாகராஜ பாகவதர், ராஜ முக்தி (1948) என்ற திரைப்படத்தில் பாடிய ’நீ பள்ளி எழுந்தால் அல்லாது உயிர்கள் உறக்கம்’ என்ற பாடல்.

2. T.ராஜேந்தர் இயற்றி, S.P. பாலசுப்ரமணியம் ’மைதிலி என்னை காதலி” (1986) என்ற திரைப்படத்தில் பாடிய ’சலங்கையிட்டாள் ஒரு மாது’ என்ற பாடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-16, 4:05 pm)
பார்வை : 864

சிறந்த கட்டுரைகள்

மேலே