திருக்குற்றாலம் பதிகம் 11 - கலித்துறை

மாட வீதி வருபுனற் காழி யார்மன்னன்
கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே. 11 - கலித்துறை

பதவுரை:

கோடல் – செங்காந்தள்,
கொழுமுனை கூம்பும் – உருண்டு திரண்ட கூம்பியுள்ள

பொருளுரை:

மாடவீதிகளும் ஆற்று நீர்வளமும் மிக்கதான சீர்காழிப் பதியில் பிறந்த மதிப்பிற்குரியவன், செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் உருண்டு திரண்ட கூம்பியுள்ள மலைகளையுடைய குற்றாலத்தை விரும்புபவன்,

நற்றமிழ் ஞானசம்பந்தன் குற்றாலநாதர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடியவர்க்கு அவரவர் தம் பாவம் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-16, 10:47 am)
பார்வை : 572

மேலே