தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து30---ப்ரியா

ரியாவின் டயரியை மொத்தமாய் படித்த வசந்துக்கு மனது கனத்தது...அவளது வரவை நோக்கிக்கொண்டிருக்க சரியான சமயத்தில் அவளும் வந்து சேர்ந்தாள்.....அவன் அமர்ந்திருந்த நிலையப்பார்த்த ரியாவுக்குள் பதற்றமாகவே இருந்தது...கண்டுகொள்ளாததுபோல் உள்ளே சென்றவளை........

ஏய்! நில்லுடி! இங்க வா ....என்று அழைத்தான் வசந்த்!

ஏதோ நடக்கப்போகிறது என்று தயங்கி தயங்கி அவன் பக்கத்தில் வந்தாள் ரியா அவள் வந்ததுதான் தாமதம் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டான் வசந்த் அவனது இந்த அணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்தாள் ரியா வழக்கத்தை விட இவனது அணைப்பு அரவணைப்பு இதமாய் இருந்தது.......கோவமில்லை, வெறுப்பில்லை வெறும் பாசம் மட்டுமே தெரிந்தது அவனது அன்பான அணைப்பில் மெய் மறந்து போனாள் ரியா.... பதில் பேசாமல் நின்றாள் அவனும் எதுவும் சொல்லவில்லை கண்ணீரை மட்டும் பொழிந்தனர் இருவரும்....!!

இரண்டுநிமிட மௌனத்திற்குப்பின் அவன் அவள் முகத்தை உற்றுப்பார்த்தான் ஆனால் அவளால் அவனது நேர்பார்வையை எதிர்கொள்ள முடியாமல் குனிந்துகொண்டாள்.!

"உன் ஒற்றைப்பார்வையால்
என்னை மொத்தமாய்
சாய்த்தவனே"என்ற அவளின் அவனுக்கு சொந்தமான அந்த மூன்று வரிக்கவிதையை ஒருமுறை சொல்லிக்கொண்டான்......எம்மாடி என்னமா கவிதை எழுதறா முடியவில்லை பெண்ணே......இப்பொழுது எனக்கும் காதல் கவிதைகள் அருவி அருவியாய் கொட்டுகின்றது என்று அவன் சொல்லி சிரிக்க அவன் சிரிப்பில் வெட்கமானாள் ரியா....பல நாட்களுக்கு பிறகு இன்றுதான் அவனைப்பார்த்து காதலால் வெட்கத்தில் முகம் சிவந்திருக்கிறாள் ரியா.....இதுவரை பயத்தினாலும் வெறுப்பினாலும் கோவத்தினாலும் சிவந்த முகம் இன்று முதன்முறை வெட்கத்தால் சிவந்தது.....

அவளது நாடியை உயர்த்தி கண்களை இன்னும் ஆழமாய் பார்த்தான்.....என் டயரியை எப்படி படிச்சீங்க என்று மெலிதான குரலில் கேட்டுவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.....

டயரியை விடு இதுதான் மேட்டர் என்றவன்....அவளது அந்த வரைபடத்தையும் குறிப்புகளைக்கொண்ட பேப்பர்களையும் எடுத்துக்காட்டினான்...!

நீ தரையை பார்க்கவேண்டியவள் அல்ல தலையை நிமிர்த்தி என்னைப்போல் நடக்க வேண்டிய ஒரு சாதனைப்பெண் உனக்கு முன்னால் நான்தான் குனிந்து மரியாதை தரவேண்டும் என்று அவளைப்புகழ்ந்தான்.....அவனை அறியாமலேயே கண்களில் அளவுக்கு மீறி கண்ணீர் கொட்டியது.....என்னடி இது என்று ஆனந்தக்கண்ணீருடன் மறுபடியும் அவளைக்கட்டிக்கொண்டான்,,,,,என்ன எங்கயோ உச்சத்திற்கு எடுத்து சென்றுவிட்டாய் என்று அவள் கைபிடித்து முத்தமிட்டான்!

ஐயோ உங்களுக்கு எப்படி இது கிடச்சிது நான் இன்னும் இதை நான் சரியாக முடிக்கவில்லை நீங்கள் பார்த்துவிட்டீர்களா???என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ?இது சரியான வடிவமைப்புதானா?இதை இங்கு சந்தைப்படுத்தலாமா?இந்த மாடல் புது வகைதானா? என் படைப்பு உண்மையிலேயே அருமையாக உள்ளதா? என்று ஆச்சரியத்திலிருந்து மீளாமல் கேட்டாள்...!

இதற்குமேல் என்ன சொல்ல என் தங்கமே இதைவிட புத்திசாலித்தனமா யாராலயும் பண்ணமுடியாது...இத்தனை கால கடினஉழைப்பில் நான் கூட இந்த மாதிரி ஒன்றை படைக்கவில்லை......என் புத்திக்கு தெரியாதது உனக்கு தெரிந்திருக்கிறது என்று சொல்லி மறுபடியும் அள்ளி அணைத்துக்கொண்டான்....

உண்மையிலேயே பிரமாதம் மை டியர் செல்லமே எப்படிடி இவ்வளவு சாமர்த்தியமாய் பண்ணினாய் இப்போகூட இதுகனவா?இல்லை நிஜமான்னு தோணுதும்மா என்று சந்தோஷமாய் புன்னகைத்தான் வசந்த்.........நீ எனக்கு தந்த மிகப்பெரியபரிசு இதுதான் என்று அந்த வரைபடத்தையும் முத்தமிட்டு அவள் காலடியில் வைத்தான்...!

ஒரு சில மாற்றங்கள் என எல்லாம் சரி செய்துவிட்டு அதை லண்டன் கம்பெனிக்கு அனுப்பி வைத்தான்.....அடுத்த தினமே அங்கிருந்து பதிலும் வந்தது......செலெக்டா? இல்ல ரிஜெக்டா? என்று கைகள் தடுமாற அந்த கடித்ததை வாங்கினான் வசந்த்......பக்கத்தில் படபடப்போடு இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ரியா???



தொடரும்.....!!
(நாளை நிறைவுப்பகுதி).

எழுதியவர் : ப்ரியா (16-Mar-16, 12:52 pm)
பார்வை : 500

மேலே