பாட்டுக்காரன் காதல்---ப்ரியா

அந்த பேருந்தின் இரண்டாம் இருக்கையில் ஜன்னலோரம் வந்து வசதியாய் அமர்ந்து கொண்டாள் பாயல்.....பேருந்து வேகமெடுக்க அவளின் மனமும் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் எந்தவொரு படம்,குறும்படம்,நாடகம் என எது இறங்கினாலும் படம் பார்க்கிறாளோ இல்லையோ அதிலுள்ள அனைத்து பாடல்களையும் உடனுக்குடனே ரசித்து கேட்டுவிடுவாள்......16வயது முதல் 27வரை இது நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு இவளுடைய தோழிகளும் இவளுக்கு உதவி செய்து வருகின்றனர்....பாயல் ஒரு பிரபலமான பத்திரிக்கைத்துறையில் பணி புரிந்து வருகிறாள்.அதனால் இந்த தேடுதல் இவளுக்கு கொஞ்சம் எளிதாகவே இருந்தது.

இவள் இப்படி இந்த பாட்டுக்களின் மேல் பைத்தியமாக இருப்பதற்கு காரணம்.....பாடல்களின் மீதுள்ள ஈர்ப்பு மட்டுமில்லை அந்த பாட்டுக்காரனின் மீது கொண்ட ஈர்ப்பு.....பாடல்களுக்காக இல்லை அவனது குரலுக்காகவே ஒவ்வொரு பாடல்களையும் தவறாமல் கேட்டுவிடுவது வழக்கம்....அப்படி கேட்கும் பாடல்களில் இது அவனாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் யாருடைய குரலாவது இருந்தால் போதும் உடனே கிளம்பிவிடுவாள் அவரைத்தேடி.....இதுவரை இது போல் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் அவளை ஈர்த்த அந்த பாட்டுக்காரனை இன்று வரைக்கண்டு புடிக்கமுடியவில்லை....

இதோ இன்றும் அவனுக்காக தான் இந்த பயணம்......

கடைசியாக பார்த்த ஒரு நாடகத்தில் 5 வரி பாடல் ஒன்று இடம்பெற்றது...அதை கேட்டவளுக்கு அது தன் பாட்டுக்காரனின் பாடல் என எண்ணம் தோன்ற? அந்த பாடகரின் முகவரியையும் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு வாங்கிக்கொண்டு......உடனே அடுத்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.....

நிச்சயம் இது அவனாகத்தான் இருக்கும் தான் என்ற நம்பிக்கையோடு ஆவலோடு பயணித்துக்கொண்டிருக்கிறாள் சென்னையை நோக்கி....

ஒரு வழியாய் சென்னையை அடைந்தவள் அங்குள்ள தன் பத்திரிகை தோழர் ஒருவர் மற்றும் ஒரு ஆட்டோக்காரரின் உதவியுடன் அந்த பாடகரை தேடி கண்டும் பிடித்தாள்.....ஆனால் இவள் தேடி வந்த பாட்டுக்காரன் இவனில்லை வழக்கம் போல் ஏமாற்றம் அடைந்தாள். சோர்ந்து போய் வாசலில் அமர்ந்தாள் உடன் சென்ற பத்திரிகை நண்பருக்கு அவசரமாக ஒரு அழைப்பு வர இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க வந்து உங்களை அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்பிவிட்டான்.

பாயல் தேடி வந்த அந்த பாடகர் சிறிது நேரத்தில் வெளியே கிளம்ப....... வாசலில் சோர்வாய் அமர்ந்திருந்த பாயலிடம் என்ன என்று முழு விபரமும் கேட்டார்?

சொல்லத்தயங்கியவள்...ஏனோ அந்த பாட்டுக்காரனின் மேல் கொண்ட காதலால் இந்த பாட்டுக்காரனிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டாள்....

இவளது கதையை கேட்ட இவனுக்கு மிகவும் வருத்தமாகவும் ஒருபுறம் சந்தோஷமாகவும் இருந்தது.....இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஊரில் சாதரணமாக பாடிக்கொண்டிருந்த ஒருவன் மேல் இவ்வளவு காதலா?அதுவும் சிறிதும் கள்ளம்கபடமில்லா காதலா?என அந்த பாட்டுக்காரனை நினைத்து பெருமைப்பட்டான்...........என்? அந்த பாட்டுக்காரன் நானாக இருந்திருக்கக்கூடாது என்று பொறாமையும் கொண்டான்.

சரி எனக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று இவன் சொல்ல இவனது பேச்சுக்கள் நம்பிக்கைக்கொடுக்க....இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டனர் முகவரியையும் பெற்றுக்கொண்டான்.....!!


ஏமாற்றத்தோடு மீண்டும் ஊருக்கு கிளம்பினாள் பாயல்??? பேருந்து முன்னோக்கி வேகமெடுக்க பாயலின் நினைவுகளோ பின்னோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.......

16 வருடங்கள் அவன் இவளின் ஊரில் தங்கியிருந்தான்.....இவர்கள் ஊரில் மற்றும் பக்கத்து ஊரில் என என்ன விழாக்கள் என்றாலும் இவனின் பாடல்களுக்குத்தான் வரவேற்பு.....அவனே எழுதி அழகாய் பாடுவான் நல்ல குரல்வளம் இனிமையாய் இருக்கும் அவனது பாடல்களை அனைவரும் ரசிப்பர்....ஆனாலும் எல்லாரைவிடவும் பாயலே மிகவும் ரசிப்பாள் ....பாயலுக்கு 16 வயது வரை அவன் அந்த ஊரில் தான் இருந்தான்......

தனக்கு விபரம் அறிந்த நாள் முதல் அவனது பாடலை தினம் தினம் கேட்டு கேட்டு அவன் பாடலுக்கும் குரலுக்கும் அடிமையாகிப்போனாள்..அவன் பாட்டிலேயே இவளை முழுவதும் தொலைத்துவிட்டாள்.....அவன் பாட்டுக்கு அவ்வளவு ரசிகை....முதலில் அவன் பாடலுக்கு ரசிகையாகி அடிமையாகிப்போனவவள் நாட்கள் போகப்போக அவனுக்கும் ரசிகை ஆகிப்போனாள்.

அவனுக்கு அப்பா அம்மா கிடையாது பாட்டியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஓரளவுக்கு படிப்பும் உண்டு அதை விட பாட்டில் முழு ஈடுபாடு கொண்டவன்.......சில வருடங்களில் நிச்சயம் இவன் பெரிய ஆளாக வருவான் என பாயல் உட்பட அந்த ஊர் மக்கள் அனைவரும் நம்பியிருந்தனர்..... பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் அவனது வீட்டுக்கு சென்று பக்கத்தில் அமர்ந்து அவன் பாடலை கண்மூடி கேட்டு ரசிப்பாள்.

இப்படியே நாட்கள் கழிய அவனை மனது முழுவதும் நிறைத்துக்கொண்டாள் பாயல்...வாழ்க்கை முழுக்க அவன்பாட்டுக்கு நான் ரசிகையாக இருக்கணும் என நினைத்தவள்....அவனையே காதலித்து திருமணம் செய்து கொண்டால் என்ன என்று யோசித்தாள்....அவனிடமே தன் காதலை சொல்ல அவளது 16-வது பிறந்தநாள் அன்று ஏதோ தனக்கு தெரிந்த காதல் வசனங்களோடு உற்சாகத்தோடு அவன் வீட்டுக்கு சென்றாள்.......!!!

பாயலை வரவேற்க அவளுக்கு இரண்டு அதிர்ச்சிகள் அவன் வீட்டில் அவளுக்கு காத்திருந்தன....1.பக்கத்து வீட்டு வானதி அக்காவுக்கும் அவனுக்கான காதல் விவகாரம்......2.அவனது பாட்டியின் மரணம்.

வானதியுடனான அவனது காதல் ஊருக்கேத்தெரியவர யாரும் அவனது காதலை ஏற்றுக்கொள்ளாததாலும் பாட்டியின் மரணத்தாலும் அந்த ஊர் வெறுப்புடன் அவனை பார்க்கும் பார்வையாலும் இந்த ஊரின் மீது இவனுக்கு வெறுப்பு ஏற்பட.....அவன் மீது உயிராய் இருக்கும் பாயலின் காதலையும் அறியாமல்(அறிவதற்குள்) அந்த ஊரைவிட்டே சென்றுவிட்டான்.......

இன்றுவரை அவன் நினைப்பிலும் பாடலிலும் தன்னை முழுமையாய் தொலைத்தவளின் கண்கள் அவனது ஒற்றைக்காதல் பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது காதுகளோ ஒருமுறை அருகில் அவன் பாட்டை கேட்க துடிக்கின்றது.......மனதோ நொடிக்கொருமுறை அவன் நாமம் சொல்ல.....அவனது வரவை ஒவ்வொருநாளும் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருந்தது...நாட்கள் போக போக அவன் நினைவுகள் அதிகமாவதைத்தவிர குறைந்தபாடில்லை.....

வீட்டில் திருமணம் பற்றிய பேச்சை தொடர்ந்தாலே இவளுக்கு பிடிப்பதில்லை இத்தனை நாளும் தட்டி தட்டி விட்டுவிட்டாள்.....27 வயதும் ஆகிவிட்டது இந்த வருடம் நிச்சயம் திருமண ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.ஒன்றும் புரியாமல் பேருந்து பயணத்தில் தன் நினைவுகளில் முழுவதும் மூழ்கிப்போனாள்.......அவனோடு தான் கொண்ட காதலை எப்படி வீட்டில் சொல்லமுடியும் அவன் எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? இப்போது திருமணம் நடந்து முடிந்திருக்குமா? என்று பல எண்ணங்கள்???பெயர் சொல்லும் அளவுக்கு அவன் வளர்ச்சியடையவேண்டாம் என் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பழைய பாட்டுக்காரனாகவே இருந்தால் போதும்.....அவனை எப்போது கண்டுபித்து????ஐயோ கடவுளே!!!! என்று தலையை பிய்த்துக்கொண்டாள்.....


இவளிடம் அந்த பாட்டுக்காரனைப்பற்றி பேசிவிட்டு வெளியில் புறப்பட்டு சென்ற அந்த பாடகரிடம் உதவியாளர் ராகேஷ் வந்து "சார் நம் புதுப்படத்துக்கு புதிதாக ஒரு பாடகரை தேர்வு செய்துள்ளேன்......மிகவும் திறமையானவர்.....பாடலை எழுதி அவராகவே பாடியும் காட்டிவிட்டார் மிகவும் அழகான வரிகள் குரல்வளம் மிக மிக சிறப்பு"என்று சொல்லிக்கொண்டே அவனைக்காண்பித்தான்.....

இதற்கு முன் வேறெங்கேனும் பாடல்கள் எழுதிபாடிய அனுபவம் உண்டா? என்று கேட்டுக்கொண்டே அவனருகில் சென்றான்.

இதுபோல் இல்லை சார்....ஆனால் ஊரில் இருக்கும் போது என் ஊர் மற்றும் பக்கத்து ஊர்களில் என்ன விழாக்கள் வந்தாலும் எல்லா விழாக்களிலும் என் பாடலுக்குதான் வரவேற்பு அதிகம்....அதன் பிறகு வாய்ப்பு கேட்டு கேட்டு தோற்றுப்போனேன்......இப்பொழுது இதுதான் முதல் பாடல் என்று சொல்லி புன்னகைத்தான்.......அவனது பதிலில் ஒரு சிறந்த பாடகரின் முதிர்ச்சி தெரிந்தது.

முதன்முதலில் ஒரு பிரபலமான கதாநாயகன் நடிக்கும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் தானே எழுதி பாடலைப்பாடிக்கொண்டிருந்தான் மித்ரன்(அவளின் பாட்டுக்காரன்)....

"எவ்ளோ தொலைவில் எத்தேசத்திலிருந்தாலும் உண்மைக்காதல் ஒருபோதும் மாறுவதில்லை வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் காதலுக்கு அழிவு என்பதே இல்லை" என்று நினைத்து புன்னகைத்துக்கொண்டே......பாயலுக்கு அழைப்பைக்கொடுத்தார் இந்த பாடகர்.???

அடுத்த சிலமணிநேரங்களில் பதற்றத்தோடு அங்கு வந்த பாயலுக்கு இன்ப அதிர்ச்சி........ஆம் இவளின் பாட்டுக்காரன்... என் பாட்டுக்காரன் என்ற உரிமையோடு......

மௌனமாய் அதே காதல் பார்வையோடு அதே ரசிப்போடு ஏக்கத்தோடு அந்த பாட்டுக்காரனை பார்த்ததும் அருகில் வந்த பாயல்.....சுற்றுமுற்றும் பார்க்காமல் சற்றும் யோசிக்காமலேயே ஓடி வந்து முகம் முழுவதும் முத்தங்களோடு அவனை அணைத்துக்கொண்டாள். இந்த மித்திரன்(பாட்டுக்காரன்)தான் இவளது பாட்டுக்காரன்... அவளது இந்த இறுக்கமான அணைப்பில் அவளின் ஆழமான காதலைப்புரிந்துகொண்டான் மித்ரன்….பல ஆண்டுகளாக அவள் தேடும் பொக்கிஷம் கிடைத்தது இன்று.

இப்பவே எனக்காக ஒருபாடல் என அவன் காதுகளில் முணுமுணுத்தாள் பாயல்.....


-ப்ரியா

எழுதியவர் : ப்ரியா (19-Mar-16, 10:21 am)
பார்வை : 833

மேலே