கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைப்பில் நாடோடி மன்னன் (1958) என்ற திரைப்படத்தில் T.M.சௌந்தரராஜன், ஜிக்கி பாடிய ஒரு அருமையான பாடல் ‘கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே’. காட்சிகள் கனவில் தண்ணீருக்குள், நீர்க்குமிழிகளுடன் விரியும்.

ஜிக்கி சொற்களை உச்சரிக்கும் தொனியே தனி; M.G.ராமச்சந்திரன், சரோஜாதேவி அருமையாக இனிமையாக, நளினமாக நடித்திருக்கிறார்கள். பாடலைக் கேட்பதுவும், காட்சிகளை ரசிப்பதுவும் இனிய அனுபவம். யு ட்யூபில் கேட்டுப் பாருங்கள்.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்ப
காவியக் கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்ப
காவியக் கலையே ஓவியமே - செழும்
கனி போல சுவைதரும் மாமணி - என்
பாடிடும் பூங்குயிலே - செழும்
கனி போல சுவைதரும் மாமணி - என்
பாடிடும் பூங்குயிலே - இன்ப
காவியக் கலையே ஓவியமே (கண்ணில்)

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஓஓ....ஓஓ ஓஓ ஓஓ
சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல
வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழையின்றி ஏதும் இல்லை
அமுதே உனையன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே - இன்ப
காவியக் கலையே ஓவியமே (கண்ணில்)

அங்கும் இங்கும் விளையாடி அலைபோல உறவாகி
அங்கும் இங்கும் விளையாடி அலைபோல உறவாகி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னைத் தேடுதே
உன்னை உன்னைத் தேடுதே

கொஞ்சிப் பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சிப் பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே

மகிழ்வோம் நாமே / புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே / புதுமை வாழ்விலே - இந்த
காவியக் கலையே ஓவியமே (கண்ணில்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-16, 11:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 331

சிறந்த கட்டுரைகள்

மேலே