நடமாடும் நதிகள் - 51 ஆசை அஜீத்

காற்றுமண்டலத்தில் கலந்திட
காலதாமதமான உன் மூச்சுக்காற்றால்
நயாகராவில் பனியுறைவு -1

அறிஞருக்கு ஏழையின்
சிரிப்பினில் எனில் இக்கவிஞருக்கு
பூவையுன் பூஞ்சிரிப்பினில் ...2


உடலிளைக்க நடைநடக்கின்றாய் பூங்காவில்
உனைஈர்க்க சாமரம்வீசியே
இடைமெலிகின்றன பூமரங்கள்-3


மௌனித்தபடி மயானத்திலிருந்தேன்
எழில்நிறை சுவனம் சேர்த்தாய்
ஆசைபாசை பேசி - 4

சூதுவாதிலா மாதுநீஎன யாருமுனை
கண்டிருக்க எனைக்கவ்விடும்
சூதாய் உன் சுவாசம் ....... -5

மௌனவிரதம் உண்ணாவிரதம் கடந்திதோ
சுவாசவிரதம் இருக்கத்தயார்
உன் சுவாசத்தீண்டலுக்காக .....-6

காவலன்தான் நான் உனைக்காணும்வரை
கண்டபின் உன்னிதயம்
களவாடிய சுவாசக்கள்வன்......-7

எண்ணிலா வேதங்கள் மண்ணிலிருந்தும்
உன்னில் சுழற்சிப்பெறும்
சுவாசமேயென் வேதம் .....-8


வார்த்தை வடிவிலேயே எம்மொழியிலும்
வீற்றிருக்க உன்னில்மட்டும்
ஓசை(சுவாச)வடிவில் மந்திரம் .....-9


(சு)வாசமலர் நீ வாசலில்குந்தியிருக்க
பூகோளமே பூக்கோலமென
காட்சிப்பிழையாய் ...- 10









இப்படைப்பு பதியப்பட உதவி
உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றி !!

எழுதியவர் : ஆசை அஜீத் (27-Mar-16, 12:19 am)
பார்வை : 531

மேலே