நித்தியானந்தந் தேடல் - ஹிந்துஸ்தான் காப்பி

இந்தப் பாடலில் கவி மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் மன நிம்மதிக்காக நித்தியானந்தம் தேட வழி சொல்கிறார்.

பல்லவி:

நித்தியானந்தத்தை நாடு – பர
நின்மலசுகந்தேடு - மனமே

அநுபல்லவி:

சத்தியமார்க்கந் தனிலேகூடு
சற்சனசங்கத் துடன்உறவாடு (நித்தியா)

சரணங்கள்:

இந்திரஜாலம்......................................உலகவைபோகம்
இன்றைக்கிருப்பதுவோ...................................சந்தேகம்
அந்தரமின்னல்போல்..............................அழியுந்தேகம்
ஐயோஅதனுடன்.....................உனக்கென்னஸ்நேகம் (நித்தியா)

தனதானியமுத.........................................லானசம்பத்து
சாசுவதமோஅதற்......................................காயிரந்தத்து
தினமுங்கவலை.........................விளைத்திடும்வித்து
சீச்சீஅவனை......................................விரும்பல்விபத்து (நித்தியா)

மெய்யேஒன்றுக்கும்...........................உதவாப்பண்டம்
மிருகாதிகள்சூழ்......................................மாமிசகண்டம்
பொய்யோஇதற்கிங்கு..........................நித்தியகண்டம்
புண்ணியஞ்செய்யுனக்........................காயிரந்தண்டம் (நித்தியா)

காண்பதெல்லாம்நிலை....................யல்லஅநித்தியம்
காயம்இறங்கிட..........................வேண்டும்அகத்தியம்
வீண்பெருமாள்மீதுனக்..................கென்னபைத்தியம்
வேதநாயகன்....................................சொல்லேசத்தியம் (நித்தியா)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-16, 9:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

மேலே