தமிழோடொரு காதல்

காதலே உன் மீதிலா
கருத்து நிறைந்த பாவிலா

தீதிலா உன் திறத்திலா
தெளிந்த உந்தன் நிறத்திலா

சூதிலா உன்சுயத்திலா
சொல்ல வரும் நயத்திலா

கோதிலா பூங் கொத்திலா
கொள்கை மாறா வித்திலா

தூதிலா துள்ளும் மொழியிலா
துயர் துடைக்கும் வழியிலா

ஏதிலா உயர் இலக்கிலா
எதையும் வெல்லும் சொல் வழக்கிலா

காதிலா உன் கண்ணிலா எனைக்
கவர்ந்த அழகு எண்ணிலா

ஆதாலால் உன் அடிமையா எனை
ஆள்வதுந்தன் கடமையா...

எழுதியவர் : சிவநாதன் (1-Apr-16, 3:49 pm)
பார்வை : 341

மேலே