வெண்ணிலா வானில் வரும் வேளையில் - கல்யாணி

கவிஞர் வாலி (அப்பொழுது வாலிக்கு சுமார் 37 லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்) எழுதி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்து, பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராசன் பாடிய ஒரு இனிமையான் பாடல்.

மன்னிப்பு என்ற 1969 ல் வெளிவந்த திரைப்படத்தில் ஜெயசங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா இருவரும் காதலர்களாக நடித்துப் பாடி இருக்கிறார்கள். காதலியும், காதலனும் மாறி மாறி கேள்வி கேட்க, காதலனும், காதலியும் சமயோசிதமாக பதிலளிப்பதுமான காட்சிகள். மிகவும் அருமை.

வெண்ணிலா வானில் வரும் வேளையில்...

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்...

நாலுவித குணம் இருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுதுவரை
அனல் போல் கொதிப்பதெது? (நிர்மலா)

ஆசை கொண்ட இதயம் அது

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வானவில்லின் நிறம் எடுத்து
மேகம் என்னும் வெண்திரையில்
மின்னல் என்னும் தூரிகையால்
நான் வரைந்த கோலம் எது? (ஜெயசங்கர்)

கன்னி எந்தன் வடிவம் அது

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

காமன் கை வில்லெடுத்து
அஞ்சுவித பூ தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரம் எது? (நிர்மலா)

மஞ்சள் வெயில் மாலை அது

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழை துளி விழுந்து
கொஞ்ச கொஞ்ச என்ன வரும்? (ஜெயசங்கர்)

முத்து ஒன்று பிறந்து வரும்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலா கனவுகளில் எதை எதையோ நினைத்திருந்தேன்.

குறிப்பு:இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது.

ஒவ்வொரு அருமையான பாடல்களில் நடிப்பதற்கு அந்தந்த நடிகர்களுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று நான் நினைப்பதுண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Apr-16, 9:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 964

மேலே