போதைக்கும் பகைவரா

அய்யோ இத்தனை காலம்
குடித்து போதையில் மயங்கி
இன்பமாய்ப் பொழுதைக் கழித்தோமே.

இன்று மதுவுக்கு பகைவராய்
அரசியல்வாதிகள் எல்லோரும்
கூட்டணி அமைத்து விட்டார்களே!

குடித்துக் குடித்துக் குடியைக்
கெடுத்தவரை கெடுக்கவா
மதுவை ஒழிப்போம் என்று
அறிவிப்பு செய்கின்றீர்?

மது ஆலை அதிபர்களின்
வாழ்வாதாரத்தை அடியோடு முடக்கி
ஏழை விவசாயிகளின் நிலைக்கு
அவர்களைத் தள்ளவா மதுவை
ஒழிக்க முடிவெடுக்கின்றீர்?

மதுவைக் குடித்து ரகளை செய்து
வாழ்வாங்கு வாழ்ந்த அடாவடி ரடிகளின்
நிலை என்ன ஆகும் இனிமேல்?

கொலைகள் குறையும்
குற்றங்கள் குறையும்
காவலர்க்கு வேலையின்றிப் போகுமே!

ஆதலால ஆதரிப்பீர்
மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின்
மதுபாட்டில் சின்னத்தை
அனைத்துத் தொகுதிகளிலும்
வெற்றிக்கனி எமதாகட்டும்.

போதைக்கு என்றும்
விடுதலை கூடாது.
வாக்களிப்பீர் வாக்களீப்பீர்
மதுபாட்டில் சின்னத்திற்கு

--
குடிகாரர்கள் மற்றும் மது ஆலை அதிபர்கள் மற்றும் மது ஆலைத் தொழிலாளர் நலன் கருதி வெளியிட்டோர்: தமிழக மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் தலைமை நிலையம், மதுமாநகர்

எழுதியவர் : மலர் (11-Apr-16, 7:24 am)
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே