மறுக்கப்படும் தமிழனின் ஆட்சி ஏன்

தமிழன் தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடாதா. .?

நிச்சயமாக. ..அது நம் கடமை. .ஏன் அது நம் உரிமையும் கூட. ...

ஆனால் தற்போது தமிழக அரசியலில் உள்ள தமிழர் கட்சிகள் அதாவது கலப்படம் இல்லாத தமிழனை தலைவனாக ஏற்ற கட்சிகள் மீது ஏன் சாதி எனும் சாயத்தை பூசப்படுகிறது.

சாதி எனும் சாயத்தை பூசப்பட்டாலும்..அவர்கள் தமிழர்கள் இதை நாம் மறுக்க முடியாது. ஒருவேளை இவர்களில் யாராவது ஒருவர் பிற்காலத்தில் தமிழகத்தின்
ஆட்சி பொருப்பை ஏற்றால். .அவர்கள். ..
அவர்கள் மீது பூசப்பட்ட சாதிக்காக மட்டுமே உழைப்பார்கள் என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியுமா. .?
குறிப்பாக இவர்கள் மீது சாதி எனும் சாயத்தை பூசப்படுவோரிடம் மேற்கண்ட கேள்வியை கேளுங்கள்.

ஆனால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட சாதி எனும் சாயமானது...துவைத்தால் போகாது.
ஏனெனில் அது சாயமல்ல...
அது தான் உண்மை நிறம்.

நான் இந்த முடிவுக்கு வர காரணம். ..
இவர்கள் ஒரு முறை கூட சாதியை ஒழிப்போம். .என்று எந்த கூட்டத்திலும் பேசியது கிடையாது.

உண்மையில் இவர்களுக்கு சாதி ஒழிப்பு மீது பற்று இருந்திருந்தால். .தமிழகத்தில் பல சாதி கலவரங்கள் தடுத்து இருக்க முடியும்.

ஏனெனில் இவர்களுக்கும் சரி. .இவர்களின் முன்னோர்களுக்கும் சரி. .அத்தகைய "செல்வாக்கு" இவர்களை சுற்றி உள்ள மக்களிடம்.
நிச்சயமாக இது வரை நடைபெற்ற அத்தனை சாதிக் கலவரங்களையும் தடுத்திருக்கலாம் இவர்கள். செய்தார்களா...?

"வருகிற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் உள்ள எல்லா சாதி சங்கத்தையும் முடக்குவோம்..இனி தமிழகத்தை சாதி இல்லா மாநிலமாக மாற்றுவோம். அதுவும் ஒரு வருடத்தில். .முடியாவிட்டால் நாங்கள் ஆட்சியை கலைத்து விடுவோம் "

என்று யாராவது ஒருவரை தேர்தல் அரிக்கையை விடச்சொல்லுங்கள் பார்ப்போம். .பிறகு தெரியும் அவர்கள் மீது சாதி எனும் சாயத்தை பூசியிருக்கிறார்களா...இல்லையா என்று. ..

ஆனால் இப்படி ஒரு அறிக்கையை யார் வெளிட்டாலும் சரி. ..அவருக்கே அரசுடமை...!

இந்த அறிக்கையால் சிறுபாண்மை மக்கள் அரசிடமிருந்து பெற்ற சலுகைகள் பறிக்க படும்...என்று சிலர் கூறுவர். நிச்சயமாக அதர்க்கு மாற்று வழி உண்டு.
தனிநபர் வருமானம் கொண்டு சலுகைகள் வழங்கப்பட்டால்
இதர்க்கு தீர்வு கிடைக்கும்.

தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்ய வேண்டும். அதுவே நம் உரிமை. அது தான் நம் கடமை. ஆனால் கோடிக்கணக்கில் தமிழன் இருக்கும் இந்த தமிழகத்தில் எந்த தமிழர் ஆட்சி செய்ய வேண்டும் ...மேலும் அவன் நாட்டிர்க்கு நல்லவனா...என்பதில் தான் இப்போது சிக்கல். ..

இந்த சிக்கல் தீரும் வரை 500 க்கும். .1000க்கும் நம் வோட்டை விலைக்கு வாங்கி இந்த திராவிடர்களே நம்மை ஆளுமை செய்வார்கள்.

எழுதியவர் : மோகன் சிவா (12-Apr-16, 1:16 am)
பார்வை : 267

மேலே