வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா

எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில், (ஆண்டு 1968) கவிஞர் வாலி இயற்றி, வி. குமார் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஒரு அருமையான பாடல். நடிகர் நாகேஷ் பாடி ஆடி நடித்தது.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் என்ன இங்கு நடக்காதது
கொஞ்சம் முயன்றால் எது இங்கு கிடைக்காதது? (வெற்றி)

பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து .......................................மாதமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில்
...................தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் .......................அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும்
பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல் (வெற்றி)

கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் .......................................முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலங் ......................................கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் .................................சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு .............வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல் (வெற்றி)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-16, 9:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 654

சிறந்த கட்டுரைகள்

மேலே