நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் - சாருகேசி

எம்.ஜி.ஆர் – பத்மினி நடித்து 1962 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராணி சம்யுக்தா. கவியரசு கண்ணதாசன் எழுதி, கே.வி.மகாதேவன் இசையமைப்பில், ’சாருகேசி’ ராகத்தில் பி.சுசீலா கவர்ச்சியான குரலில் பாடிய அருமையான பாடல். பத்மினியின் நளினமான அங்க அசைவுகளும், பாவமும் ரசிக்கும்படி இருக்கும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

வாளினிலே ஒருகை ம‌ல‌ர்ந்திருக்கும்
மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்

தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்

இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்!

ஹரிதாஸ் திரைப்படத்தில் பாபனாசம் சிவன் இயற்றி, ஜி.ராமநாதன் இசையமைப்பில் M.K.தியாகராஜ பாகவதர் பாடும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' என்ற பாடலும் 'சாருகேசி' ராகத்தில் அமைந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-16, 8:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே