அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ
ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ
பெண்மை மலர்ந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயங்கும்
விடிந்தபின் தெளிவது தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா

எழுதியவர் : கவிஞர் வாலி (17-Apr-16, 7:57 am)
பார்வை : 396

மேலே