கலால் வரி

இந்த ஒரு மாதமாகவே இந்தியா முழுவதும் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடைக்காரர்கள் வாயில் முனுக்கும் ஒரே சொல். ....

"கலால் வரி"

உண்மையில் இந்த வரியானது நடைமுறை படுத்தப்பட்ட பின்பு ...
இந்தியா முழுவதும் உள்ள எல்லா நகை கடைகளும் மூடப்பட்டது என்பது நம் அனேகருக்கும்
தெரியும் என்றே நினைக்கிறேன்.

அதனால் எத்தனை நபர்கள் வேலை இழந்தனர் என்பது தெரியுமா. ...

எல்லாம் ஒரு சங்கிலி தொடர் தானே...கடைகளே மூடப்பட்டுள்ள போது இவர்களுக்கு சப்ளை செய்யும் பட்டரைக்காரர்களுக்கு எப்படி வேலை இருக்கும். ...

இந்த கலால் வரி என்றால் என்ன. ..?
ஏன் இத்தகைய போராட்டம். ..?

சுருக்கமாக சொல்லப்போனால்...
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொணர இந்த வரி பயண்படும்.

ஒரு ஆண்டிற்கு சுமார் 160 கோடி டன் தங்கம் இங்கே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் வெறும் முப்பது கோடி டன் தங்கம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக கணக்கு காட்டுகிறார்கள். No stock என்றும் கூறப்படுகிறது. இப்படி பட்ட ஒரு பெரிய கருப்பு பணம் தங்கத்தில் புரல்கிறது.அதை தடுக்கவே இந்த கலால் வரி போடப்பட்டது.

இந்த வரியின் மூலமாக எந்த கடையிலும் எந்த நேரத்திலும் சோதனை செய்யலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு கடையில் சோதனையிட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பத்து ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் இவர்களிடம் இந்த பொருட்களை வாங்கியதர்க்கான ரசீது முழுமையாக இருக்காது. பேருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு ரசீது வைத்திருப்பார்கள். மீதமுள்ள எட்டாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் எப்படி வந்தது என்ற கேள்வி வரும்.

இதர்க்கு ஒரே வழி அது கருப்பு பணம் தான் என்று கூறி வரியை கட்ட வேண்டியது தான்.

அந்த எட்டாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் யாரிடம் வாங்கப்பட்டது என்ற வினா வரும். ....

பின் அங்கும் இதே நிலை தான்.

இவ்வாறு நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரலாம்.

ஆனால் இதில் சாமானிய மக்களும் தப்புவதில்லை.

ஒரு திருமணத்தின் பொருட்டு நகை எடுக்க சென்றால் 50000 /-., மேல் தான். பணம் தேவை படுகிறது. ஆனால் ஆனால் இந்த தொகைக்கே "PAN" எண்னெய் வாங்குகிறார்கள்.

நாளை ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த கடைக்காரரின் விற்பனை ரசீதை பார்த்து வாடிக்கையாளர்களிடம் வந்து உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் நகைகள் வாங்க. .
சரியான கணக்கு காட்டுங்கள். ..
என்று சொல்லக்கூடிய காலமும் வரும்.

வாயைக்கட்டி வயித்தக்கட்டி சேர்த்து பணத்திற்கு எப்படி கணக்கு காட்டுவது. ...

எதார்த்தம் என்னவென்றால். ...
வியாபார போட்டி நிறைந்த இந்த உலகத்தில். ..ஊழல் நிறைந்த உலகில். ..நேர்மையான வியாபாரம் அதுவும் அரசாங்கத்திற்காக செய்து யாராலும் பிழைக்க முடியாது.

இந்தியாவின் அரசியல் வியாதிகளிடம் இருக்கும் கருப்பு பணம் வெளிவந்து நாட்டில் தொழில் வளம் சீராகும் வரை இப்படி தான் எல்லா தொழில்களும் நடக்கும்.

எழுதியவர் : மோகன் சிவா (19-Apr-16, 1:00 am)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 2589

சிறந்த கட்டுரைகள்

மேலே