பூவிதழ் முள்ளானது

பூவே உன்னைப் பார்த்து
தடம் மாறி போன கால்கள்
தடுமாறி காதலில் விழுந்தனவே...

உன் விரல் பிடித்து கனவில்
விண்ணிலே மிதந்தனவே...
ஓர் இதயமாய் நினைவில் கலந்தனவே......

காதலில் கலந்ததாலே
தனிமையின் சுகம் அறிந்தேன்...
நீர் வேட்கையிலும் நீரை மறந்தேன்...
விடியல் வந்த பின்னும்
விழி மூடிக் கிடந்தேன்...
இரவு முழுவதும் உன்னோடு பேசி
நாட்கள் பல விழித்தேன்...
துறும்பாக தேகம் இளைத்தேன்......

காற்றில் கலையும் மேகம் போல்
ஏன்?.. எனைப் பிரிந்தாய்...
நீயின்றி நாளும் நான் தவிக்கிறேன்...
உன்னைக் காணாது கண்கள்
துவண்டும் போகிறேன்......


துவண்டு போனக் கண்களுக்கு
உன் திருமுகம் தருவாயா?...
இல்லை,
மனதைக் கல்லாக்கி
என் உணர்வுகளை சிறையிடுவாயா?...
விரைவில் சொல்லிவிடு
உன் கனி மொழிக்கு ஏங்கி
இதயமும் இயங்காமல் நிற்கின்றதே......


பூப்பறிக்கையில் முள் தைக்கும்
இங்கு,
பூவிதழே முள்ளாய் தைக்குதே......


என்னைக் காதலித்த உந்தன்
கண்ணாடி இதயம்
புது நிழலை இன்று தேடுதோ?...

நிழல் வந்து பிரிகையில்
உன் இதயமும் உடையும்...
பல துண்டங்களாய் சிதறும்...

சிதறிய துண்டுகள்
என் நினைவுகளையே சித்தரிக்கும்...
சுவாசிக்கும் காற்றும்
தீயாய் உனைச் சுட்டெரிக்கும்......


வேதனை எனும் நோய்
வாட்டி வதைக்க
கண்களில் வழியும் நீரும்
உதிரமாய் உருவெடுக்கும்...
துடைத்தே
இரு கரமும் துவண்டு விழும்...

மரணத்தை விட கொடுமையானது
மனதில் ஏற்படும்
காதலின் வலியென்று அறிவாய்...
அன்று,
என் வலி அறிவாய்.....

ஏனென்றால்
பரந்து விரிந்த பாரில் ,
முற்றும் துறக்காத முனிவனும் இல்லை.....
முதற்காதலை மறந்த மனிதனும் இல்லை......

வாழிய வாழிய
என் வாச மலரே.........

எழுதியவர் : இதயம் விஜய் (28-Apr-16, 6:44 pm)
பார்வை : 406

மேலே