சமூகம்

சிறுகதை - சமூகம்
******************************

படத்தில் எல்லாம் ஒரு பெண்ணோ ஆணோ ஏமாற்றிவிட்டால், பழி வாங்க இறங்குவது போல, இந்த சமூகத்தால் இன்று நான் தனிமரமாக நிற்கிறேனென்று பழி வாங்க நினைத்தான் அவன்.

உடனே பழங்கால கதைகள் ஞாபகம் வர தவம் மேற்கொண்டான் ஒற்றைக் காலில் அந்த இறைவனை நோக்கி.

இறைவனோ அவன் வேண்டியது நிறைவேறும் என்று சொல்லி மறைந்தார்.

வெப்பம் சுட்டெரித்து வாடட்டும் இந்த சமூகம் என ஒரு சாபம் பிறக்க
வாடினோம் ஏழு நாட்கள். மாண்டனர் பெற்ற குழந்தைகளும், பாசமிகு முதியவர்களும்.

ஆரறிவு மிருகங்கள் இதுவரை வேட்டையாடியது ஒழிந்து மற்ற மிருகங்கள் வேட்டையாடட்டும் மனிதர்களை என்றொரு சாபம் விழ, அடுத்த ஏழு நாட்களில் வேட்டையாடப்பட்டனர் பலரும் பாலின வேறுபாடின்றி.

கடந்த காலத்தையெல்லாம் யோசித்துப் பார்த்து தன் எதிரியின் செல்லப் பிராணி, நலம் விரும்பியாக முதலில் அவனுக்கு நினைவுக்கு வந்தது மாடுகள்.

அதையெல்லாம் தான் கொல்லாமல் இந்த சமூகத்தால் சாகடிக்க இரைச்சியின் மீதொரு இச்சை பெறட்டும் இந்த சமூகம் என்று சாபமளித்தான்.
அதன்படி அடுத்த ஏழு நாட்களில் இருந்த மாடுகளையெல்லாம் ஒழித்தோம்.

அன்றிரவே அனைவரும் கொத்தோடு வீழ்ந்தனர்.

இதோ நானும் வீழ்ந்து கொண்டிருக்கிறேன் மூச்சு விட முடியாமல்.

எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஆம். சரி தான். மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை உட்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுவது மாடுகளென்று.அதையும் அறிவின்றி அழித்து விட்டோமே.

இன்றல்ல இயற்கையை அழிக்கத் தொடங்கிய அன்றே மனிதகுலம் விழத் தொடங்கியது போலொரு காட்சி,

ஒரு மாதத்தில் மனிதனின் சுவடுகளன்றி அமைதியுடன் அகோரமாக காட்சியளிக்கும் பூமியின் ஒரு காட்சி,

அதோ தூரத்தில் என்னைப் பார்த்து ஒற்றைக் காலில் நின்று சிரிக்கிறான் அவன்.

அவன் தான் மரம்.


விழுந்து இறந்துவிட்டேன்.

பயத்தில் வெகுண்டு விழித்துக் கொண்டேன் கனவிலிருந்து.

நிஜத்திலும் விழித்துக் கொண்டேன் என் மனித குலம் வீழாதிருக்க.

தாங்கள் எப்படி?
விழுகிறீரா?
விழிக்கிறீரா?

முடிவுடன் அவனை உங்கள் நினைவில் தந்து விடை பெறுகிறேன்.

நன்றி.

நர்மதா நாகராஜன்.
கோவை.

எழுதியவர் : நர்மதா நாகராஜன் (1-May-16, 4:12 pm)
சேர்த்தது : நர்மதா நாகராஜன்
Tanglish : samoogam
பார்வை : 163

மேலே