எதிர்வினைஆற்றல்

கவிதா , கவிதா முகத்தில் தண்ணீர் தெளித்து எழ்ப்பினான்.
என்ன ஆச்சிகவிதா? தலயை மடியில் சாய்த்தான் .
கண் விழித்த கவிதா திரு திரு எனஎன பார்த்தாள்.
என்ன ஆச்சிகவிதா? ராம்குமார் தவித்தார் .
வீடு வந்துட்டோமா ?.
ஆமாம் மா . என்ன ஆச்சி ? மயக்கமா இருக்கா?
ஷா க்கா இருக்கு . என்னங்க , பொண்ணு பார்க்க போனோமா ?
ஆமாம் .
நல்லா தான் பேசுனாக .அப்புறம் ஏன் அந்த பொண்ணு அப்படி பேசுனாக?
என்ன பேசுனாக?
வீட்டில ராகு கேது இருக்கும் இடம் எது ? அப்படின்னு கேட்டாளே?
ஆமாம் கவிதா எனக்கு புரியல.
ஐயோ ஐயோ புரியலியா? மாமனார் மாமியார் தான் .
அதாவது உன்னையும் என்னையும் அப்படித்தனே?
ஆமாம்ஆமாம். மாமியார் பண்ண கொடுமைய ,வர்ற தலைமுறை முன்னேற்பாடா ஒடுக்க நினிக்குறாங்க .அதாவது காலத்தால் வருகிற எதிர்வினை ஆற்றல் .கவிதா எழுந்து போனாள்..

எழுதியவர் : (2-May-16, 8:12 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 152

மேலே