10 செகண்ட் கதைகள் - சரியான ஜோடி

பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். வயசான பாட்டி அந்த தாத்தாவை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது. அவரோ சிரித்துக்கொண்டே அந்த பாட்டி பேசுவதற்கு எந்த ரீஆக்சன் காட்டாமலே இருந்தார்.

மெல்ல என்ன தான் பிரச்சினை என்று உன்னிப்பாக கவனித்தவுடன் என் காதில் தெளிவாக கேட்டது:

"செவுட்டு மிசினை எங்கே வச்சு தொலைச்சீங்க. இப்ப என்ன பண்றது. உங்களுக்கு செவுட்டு மிசின் கிடச்சா தான் என் பல் செட்டை தேட முடியும், அதையும் எங்கேயோ வச்சுட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி இந்த முழி முழிக்கிறீங்க? "

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 10:39 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 166

மேலே