உன் அழகு

ப்ப்ப்ப்பா
எத்தனை அழகு!!
பிரம்மன் உன்னை ரத்தமும், சதையும் கொண்டு செய்தானா..!!??!! இல்லை...........
பளிங்கை உடைத்து, தங்கத்தை உருக்கி, நிலவை பிசைந்து செய்தானா..!!?!!
அநேகமாய் உனக்கு பின் அவன் படைத்த உயிர்களெல்லாம் அழகாய் தான் பிறந்திருக்கும்.. ஆம்..
உன்னை படைத்தபின் தானே பிரம்மனுக்கே அழகின் அர்த்தம் புரிந்திருக்கும்..!!
உன்னை படைத்தபின் பிரம்மனும் ஒரு கலைஞன் தான்..
இதழோர மச்சமும், அது சிந்தும் புன்னகையும்,
விழியொர மின்னலும், அது தெறிக்கும் மின்சாரமும்...... அப்பப்பா..
இது வெறும் புகைப்படம் அல்ல..
உன்னுள் என்னை புதைக்கும் படம்..
பளிங்கு சிலைக்கு வெள்ளை சட்டை,
நிலவின் தலை மேல் விளக்கின் ஒளி.. இருந்தும்,
இரண்டும் உன்னிடம் தோற்று விட்டது.. (வெள்ளை சட்டையும், விளக்கும்)
ஒரு முறை உன் அழகை கண்டால்,
மலராத மலர்களும் மலர்ந்து மயங்கும்..
புல்லில் பனியும் உறைந்து நிற்கும்..
யார் சொன்னது, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்
குறிஞ்சிப் பூ பூக்குமென்று??
ஒரு முறை உன் அழகை பார்க்கச் சொல்..
அது கூட தினமும் பூக்கும்,
அதிகம் சிரிக்காதே.. பின்
பறக்கும் வண்டுகள் கூட உன் இதழையேச் சுற்றும்..
உன் இதழில் தான் தேன் உள்ளதென்று!!
பெண்மையின் இதழ் கூட சில்லென்று சிலிர்க்கும்,
ஒரு முறை உன் சிரிப்பை பார்த்துவிட்டால்.. அடடா......
என்ன அழகு டா உன் அழகு..
உன்னை வர்ணிக்க தமிழ் வார்த்தைக்கு பஞ்சம் என்று
தமிழ் கடவுளுக்கு மனு கொடுக்க போகிறேன்.. ஆனால்ல்ல்ல்ல்
அவனும் திகைப்பானோ உன் அழகை கண்ட பின்னால்..!!??!!
போகட்டும்.. தமிழ் வார்த்தைக்குத் தானே பஞ்சம்..
என் காதலுக்கு இல்லையே..!
தமிழோடு என் விரல் போடும் போட்டியை பார்த்து
நான் திகைத்து நின்ற பொதும்,
அவை இரண்டும் போட்டியை நிறுத்தவில்லை..!!
ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் போதும்,
புதியதாய் பிறந்தது போல் ஓர் உணர்வு எனக்கு.. ஆம்ம்
நான் கோடி முறை இறந்து மடிந்தாலும்,
ஒவ்வொரு முறையும் பிறந்து வருவேன்..
உன் அழகை ரசிப்பதற்கே............!!!!!!!!!!!!
நானும் கூட உனக்கு பின் பிறந்திருந்தால்..
அழகாய் பிறந்திருப்பெனோ......!!???????!!!!!!!!!
ப்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்

எழுதியவர் : சுதா ஆர் (5-May-16, 9:22 am)
Tanglish : un alagu
பார்வை : 6220

மேலே