நமக்கு ஆதரவா டாஸ்மாக் அலை வீசுது

தலைவரே, எல்லாக் கட்சிங்களும் வாக்காளர்களுக்கு எதையாவது தந்து ஜெயிக்கறதுக்கு முயற்சி பண்ணறாங்க. நம்ம மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் சார்பில எதையுமே தராம இருந்தா நம்ம 'குடி:மக்கள் வாக்க அளிக்க வருவாங்களா?
@@@@

அதப் பத்தி நீ ஏய்யா கவலப்படற. கருத்துக் கணிப்பெல்லாம் நம்ம கட்சி தான் 234 தொகுதிலயும் ஜெயிப்போம்னு சொல்லுது. மதுவிலக்கை அமல்படுத்த மாட்டோம்னு தேர்தல் வாக்குறுதி வேற குடுத்திருக்கறோம்.
@@@@
இல்லைய்ங்க அய்யா இருந்தாலும் நாம எதாவது ....
@@@@
சிலர் அவுங்களுக்கு ஆதரவு அலை வீசுதுன்னு சொல்லறாங்க. சிலருக்கு மவுன அலை வீசுதாம். நமக்கு ஆதரவா மது அலை வீசுதுன்னுகூடச் சொல்லலாம். ஆனா நமக்கு மது எங்கிருந்து கெடைக்கது?
@@@@@
டாஸ்மாக்லே இருந்துதாய்யா கெடைக்கது.
@@@@@
நாம நன்றி கெட்டதனமா எதையும் அறிவிக்கக் கூடாது. நம்ம நன்றி உணர்வை வெளிப்படுத்த நமக்கு ஆதரவா டாஸ்மாக் அலை வீசுதுன்னு நாளைக்கு நிருபர்கள் கூட்டத்தில அறிவிச்சிடலாம். டாஸ்மாக்ன்னு சொன்னாத் தாய்யா நம்ம 'குடி' தோழர்களுக்கு உற்சாகம் உண்டாகும். சரி, நீ போய் அளவாக் குடிச்சுட்டு தூங்கு.

எழுதியவர் : மலர் (12-May-16, 11:48 pm)
பார்வை : 229

மேலே