அரசியல் -குறள் -382

அரசியல்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் - இறைமாட்சி

குறள் - 382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

விளக்கம் :

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

இக்கால சூழ்நிலையில் நம்மை ஆளுமை செய்யும் தலமைகளுக்கு இந்த தகுதிகள் உண்மையில் உண்டா. ..

1.அநீதிக்கும் பகைவனும் பயம் கொள்ளாமல் இருப்பது. ..

நம் நாட்டிலே பெரும்பாலான அநீதிகளின் பின்னணி நம் தலைமையும் அதன் கிளைகளும் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிறகு எதர்க்கு இவர்கள் பயம் கொள்ள வேண்டும். ..?
பகைமை இவர்களுக்குள் பிறந்தாலும் சரி வெளியே இயங்கினாலும் சரி இவர்களுக்கு பயம் என்பது பிறக்காது.காரணம் அநீதி இவர்களுக்கு அரணாக அமையும்.

இவர்களை பயம் கொள்ள வேண்டும் என்றால் அது "மக்கள் புரட்சி "மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. புரட்சிக்கும் தலைமை தேவை படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே எறியும் புரட்சி வெறியை வெளியே கொண்டு வர தலைமை தேவை படுகிறது. அந்த தலைமை யார். ..? பூனைக்கு மணி கட்டுவது யார். ..?

2.வேண்டுவோருக்கு வேண்டியவை கொடுப்பது...

வள்ளுவர் கூறியதோ.., தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவர்களின் தேவை அறிந்து நிவர்த்தி செய்யும் பக்குவம் உள்ளோரே சிறந்த தலைவர். ..

ஆனால் நம் தலைமையோ வேண்டியவருக்கு வேண்டியததை கொடுக்கிறது. ..
என்ன கொடும சார். ...!

3.வரும் முன் காத்தல்...

அவர்கள் விஷயத்தில் காப்பார்கள்...மக்கள் விஸயத்தில்...?

4.ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் ...

நம் நீதிதுறையில் பெய்லும்., வாய்தாவும் இருக்கும் வரை
இவர்களுக்கு இந்த தளராத ஊக்கம் இருக்கும்.

எழுதியவர் : மோகன் சிவா (13-May-16, 3:38 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 376

மேலே