சித்திரம் பேசுதடி - மிஸ்ரபெஹாக்

சிவாஜிகணேசன் – மாலினி நடித்த ’சபாஷ்மீனா’ (1958) என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய குடிசையில், ஒரு கையில் சிகரெட் பிடித்தபடி, வலது கையில் சாக்பீஸால் கரும்பலகையில் காதலியின் உருவத்தை வரைந்தபடி காதலனாகிய சிவாஜிகணேசன் பாடும் ஒரு இனிமையான பாடல்.

காதலியாகிய மாலினி எளிமையான பாவாடை தாவணியில் மறைந்திருந்து ரசித்துக் கொண்டிருப்பார். கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் எழுதிய பாடலை, டி.ஜி.லிங்கப்பா இசையமைப்பில், ’மிஸ்ரபெஹாக்’ ராகத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார்.

எங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலும், என் திருமணத்திற்கு முன்னும், இன்று வரையிலும் மனதைச் சுண்டி இழுத்து, கேட்டு ரசிக்கும்படியான மனதைக் கிறங்க வைக்கும் பாடல் சித்திரம் பேசுதடி!. இன்று யுட்யூபில் பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன்.

சித்திரம் பேசுதடி!
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி

முத்துச் சரங்களைப்போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப்போல்
மோகனப் புன்னகை மின்னுதடி (சித்திரம்)

தாவும் கொடி மேலே....
ஒளிர் தங்கக்குடம் போலே
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி (சித்திரம்)

என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
ஏனடி தேன் மொழியே (சித்திரம்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-16, 2:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 216

மேலே