எது சனநாயகம்

எது சனநாயகம்?....
எது சனநாயகம்?....

நம் நாட்டில் சனநாயகம் என்ற பெயரில்,
பணம் மூலமாக விலைபேசி, ஆட்சி அமைத்துப் பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் நடத்தும் அரசாங்கமாக உள்ளதே....

இது குறித்து ஒரு அரசியல் தலைவரிடம் பேசிய போது அவர் என்னிடம் சொன்னார், " நம் கைகளில் உள்ள விரல்களில் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதில்லை...
அது போல தான், ஒரு நாடு என்றால் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் ," என்று...

அந்தப் பதிலைக் கேட்டு அதிர்ந்தே போனேன்....
அப்போது தான் உணர்ந்தேன், தத்துவங்கள் நல்லதையும் சொல்கின்றன, கெட்டதையும் சொல்கின்றன என்பதை.....

உடனே, அந்த அரசியல்வாதியை நோக்கிப் பதிலளித்தேன், " நம் கைகளில் உள்ள விரல்கள் உருவத்தில் வேறுபட்டிருக்கலாம்,
ஆனால், அவை ஒன்று பட்டால் தான் எந்த வேலையையும் செய்ய முடியும்....
அது போல, ஒரு நாட்டில் ஏழை, பணக்காரன் என்று பல வேறுபாடுகள் இருக்கலாம்...
ஆனால், அவர்கள் ஒன்றுபட்டால் நாட்டின் முன்னேற்றம் என்ற கனவு நனவாகும்...
ஏழை எல்லாம் பணக்காரனாகிவிட்டால்
நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் முன்னேறும்...."
என்று...

அதைக் கேட்டு ஒன்றும் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார் அந்த ஏமாற்றுப் பேர்வழி....

நம் நாடு ஒரு விவசாய நாடு....
ஆனால், அரசாங்க வங்கியில் ஒரு 5000 ரூபாய் கடன் வாங்கினால்,
அதைக் கூட கட்ட முடியாத நிலை....

" ஏன்? என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை ", என்றார் ஒரு தலைவர்..
" ஏன்? என்ற கேள்வி கேட்டால் இங்கு வாழ உனக்கு உரிமை இல்லை " , என்று கொன்று விடுகிறது இன்றைய சனநாயக அரசாங்கம்....
ஒரு எதிரியை அழிக்க, ஒரு ஊரையே தண்ணீருக்குள் மூழ்கடிக்கத் திட்டமிட்டு செயலாற்றுகிறது...
இதுக்கு பெயர் தான் சனநாயகமோ..???

மக்கள் தங்களின் வாக்குகளை பணத்திற்காக விற்கையில்,
அரசாங்க அதிகாரிகள் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்பதும், வாங்குவதும் தவறா?

சற்று சிந்தியுங்கள்....

தவறுகள் எங்கே கொட்டிக் கிடக்கின்றன.???.

சுயலாபம் தான் உங்கள் நீதி என்றால் இங்கு எதுவும் மாறாது.
மாற்றவும் முடியாது....
அதுவரை சனநாயகம் என்பது வார்த்தைக்கு மட்டுமே அழகு.....

எழுதியவர் : சிவனணைந்த பெருமாள் (17-May-16, 6:00 pm)
சேர்த்தது : அழிவில்லான்
பார்வை : 254

மேலே