மாற்று அரசியல்

மாற்று கூட்டணி வைத்து மாற்றம் கொண்டு வர ஆசைப் படும் கூட்டணித் தலைவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

முதலில் அரசாங்கம் என்றால் என்ன வென்று புரிந்துகொள்ளுங்கள். மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக, நீதியை நிலை நாட்ட, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாச்சாரம் மேம்பட , ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு வழி செய்திட , வரி செலுத்தி ஒரு பொது குழுவை அமைத்தார்கள். அதற்கு தலைவனாக அரசன் ஒருவனை நியமித்தார்கள்.
ஆக, மக்களுக்காக வேலை பார்ப்பதே ஒரு அரசின் கடமை. அப்படி நீங்கள் வேலை பார்க்க ஆசைப்பட்டால் , பின்வருவதைப் படியுங்கள்.

தனித் தனிக் கட்சியாக இருந்து கொண்டு கூட்டணி அமைக்காதீர்கள். ஒரே கட்சி ஒரே சின்னம் பல நல்ல ( உங்கள் மனசாட்சிப்படி) தலைவர்கள் என்ற கூட்டணி அமையுங்கள் .இன்று சின்னம் தான் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து கிடக்கிறது. நீங்கள் கொண்டுவந்த பல சின்னங்கள் மக்களைக் குழப்புகிறது. ஒட்டு இயந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெளிச்சம் பெறா சின்னங்கள் மக்களை வேறுவழியில்லாமல் பழக்கப்பட்ட சின்னத்திற்கே வாக்களிக்கத் தூண்டுகிறது. அதில் நானும் ஒருவன்.

ஆதலால், மாற்று கட்சியாக ஒரே சின்னத்தில் போட்டியிடுங்கள். அந்த சின்னம் மக்கள் மனதில் நம்பிக்கையை பெறக்கூடிய சின்னமாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக முழு நேர ஒழுக்கமான சுயநலம் இல்லா, சாதி, சமய, மொழி சாயம் இல்லா, அரசியல் செய்யுங்கள். ஆளுங்கட்சியை உப்புக்கு சப்பில்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி எதிர்க்காதிர்கள். நியாமான விஷயங்களுக்கு அமைதியாக போராடுங்கள்.ஒரு நல்ல நிகழ்வு உங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கட்டும், மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் ஓட்டுகள் உங்களுக்கே ! இந்த ஐந்தாண்டு காலம் உங்களை செப்பனிடும் காலமாக அமையட்டும்.

இப்படி முயற்சித்துப பாருங்கள் அடுத்த தடவை. ஆனால், இவ்வியூகத்தில் , தலைவர்கள் கடைசிவரை சுயநலம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பதவி ஆசை கொண்டு ஏமாற்றினால் மறுபடியும் வீழ்ந்து போவீர்கள்.

விஜய்

எழுதியவர் : விஜய் கணேசன் (21-May-16, 1:33 pm)
சேர்த்தது : விஜய் கணேசன்
Tanglish : maatru arasiyal
பார்வை : 868

மேலே