ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்

ஆட்டிக் சமுத்திரத்தில் பனிப்பாறை
கரைந்து சமுத்திரம் பெருகியது.
ஆசியாக் கண்டத்தில் உன்னைக்
குடைந்து ஜப்பான் வென்றது.

நயாகரா அருவியில் நீந்தினேன்.
இதயக் கடலில் உயிருக்காய் தத்தளித்தேன்.

வெண்கட்டியால் அவளை வரைந்தேன்,
சங்கீதம் பாடும் சப்தஸ்வரங்களில்
கி-போட் பருக்களாய் தொட்டுப்பார்த்தேன்.

கூந்தலில் தினந்தினம் பூவாய் பூக்கிறேன்.
வாடியதும் காலால் என்னை மிதிக்கிறாள்.

நீ உண்ட பின் வாய் கொப்பளித்தாய்.
நான் தூக்கத்திலும் பல் துலக்கினேன்.

கவிதைகளை சிறகடிக்கும் இமைகளால்
படித்துப் பார்க்காதே! அவைகளும் வானில்
பறவை போல் பறந்துவிடலாம்.

தேடுதலில் காதலை தொலைத்தேன்.
தேடாமலே பாலைவனம் பரிசாய் கிடைத்தது.

தண்ணீரில் நிறைந்தது தாகம் அருந்தும் பாத்திரம்
கண்ணீரால் நிறைகிறது கனவில் பிச்சை பாத்திரம்.

எனக்கு சொந்தமான இதயக்கடலில் பயணம் சென்றாய்.
ஆனாலும் நான் தான் கப்பம் கட்டுகிறேன்.

பார்வையிழந்த குருடனாய் வாழ்கிறேன்.
நீ என்னை கடந்து சென்றால் உணர்கிறேன்.
இது காதலா?இல்லை மரணமா?

பச்சைக்கிளிகள் உன் மடியில் தூங்கக்கண்டேன்
நானும் என் வீட்டு முயலும் செல்லமாய் மாற
உனக்காய் காத்திருக்கின்றோம்.

குடிக்க குடிக்க புளிக்கும் பாலும் அவளை
பார்க்க பார்க்க அமுதாய் இனிக்கிறது,

அவள் பெயர் எழுதி கவிஞனானேன்
அவள் துரோகம் நினைத்து சகுனியானேன்.

சோலைக்குள் உன்னால் பூகம்பம் வந்தது.
அந்த பூகம்பத்தில் உதிர்ந்த ரோஜா கூட்டங்களுக்குள்
என் இதயமும் உடைந்து கிடக்கிறது,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (22-May-16, 11:06 am)
பார்வை : 268

மேலே