எங்கு நான் செல்வேன் ஐயா - த்வஜாவந்தி

'த்வஜாவந்தி' ராகத்தில் கவிஞர் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் நான்மறை நாதனாகிய சிவபெருமானை வணங்கி இயற்றிய பாடல்.

எடுப்பு

எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு

திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு

அஞ்சினோர் இடரெல்லாம் அழியவோர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

இவரது பாடல்கள் இசைக் குறிப்புகளுடன் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை 1970 ல் இசைமணி மஞ்சரி, 1972 ல் முருகன் அருள்மணி மாலை, 1974 ல் கீர்த்தனை அமுதம், 1980 ல் நவமணி இசைமாலை ஆகியவைகளாகும்.

ஆதாரம்:இசை இன்பம் வலைப்பூ/2008

பாம்பே ஜெயஸ்ரீ யு ட்யூபில் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-16, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 158

சிறந்த கட்டுரைகள்

மேலே