ஒரு தென்றல் புயலாய்

ஒரு பூந்தென்றல் என்னில் வீசியது...
புயலாய் இன்று அது மாறியது...
கூடித் திரிந்த இருப் பறவையில்
ஒன்று பறந்துப் போனது......


துடுப்பு இல்லாத படகுப் போல
என் இள நெஞ்சம் தவிக்குதே...
உரசியே உயிரை விடும் தீக்குச்சியாய்
உள் இதயம் எரிந்து சாம்பல் ஆகின்றதே......

ஒரு பூந்தென்றல்......

வண்ணத்துப்பூச்சியின் மேலுள்ள
வண்ணங்கள் மழையில் கரைஞ்சுப் போச்சு...
அந்தப் பெண்ணோட மனதின் வாசக்கதவு
சின்னதாக சுருங்கிப் போச்சு......


காதல் முத்தத்தின் சத்தம் குறைந்து
யுத்தம் பல நெஞ்சில் நடக்குது...
கரைகள் இல்லா காட்டாறுப் போல
செங்குருதி அனலாய் ஓடுதே......


உரசியே உயிரை விடும் தீக்குச்சியாய்
உள் இதயம் எரிந்து சாம்பல் ஆகின்றதே......

ஒரு பூந்தென்றல்.....

கடலாய் சோகம் சூழ்ந்தாலும்
தாமரையாய் நான் மேலே மிதந்தேன்...
அவள் எனைப் பிரிந்ததும்
விழி நீரில் மூழ்கியே தவித்தேன்......


ஒரு வாசனைத் தென்றல் வாழ்வினில் வீச
பூச்செடிகள் மனதில் நட்டு வைத்தேன்...
பூ மலர்ந்து உதிர்ந்துப் போகையில்
விசமுட்கள் நெஞ்சம் தைக்குதே......


உரசியே உயிரை விடும் தீக்குச்சியிய்
உள் இதயம் எரிந்து சாம்பல் ஆகின்றதே......

ஒரு பூந்தென்றல்......

எழுதியவர் : இதயம் விஜய் (23-May-16, 9:42 pm)
பார்வை : 388

மேலே