ஒரு நாள் காதல்

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான். கிழக்கும் மேற்க்கும் தன் கண்களை உருட்டியவாறு பெண்களுக்கே உரித்தான நிதானத்துடன் இறங்கினாள்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் தான் passport office சென்றடைய முடியும். புதிய இடம் போல் தெரிந்தது அவளுக்கு. அவளை கண்டுகொள்ளாதது போல் fileஐ எடுத்துக் கொண்டு அவள் நிற்க்கும் இடம் நோக்கி casualஆக நடந்தான் அபிஷேக்.
Are you here to apply for passport? என்ற கேள்வி காதில் விழ மேழும் கீழும் பார்த்தவாரு ஒரு வேளை அசரீரியாக இருக்குமோ என்று நினைத்தான்.
Excuse me, Are you here to apply for passport? என்று கேட்டவாரு அபிஷேக்கை நோக்கி வந்தாள்.
How do you know? என்று அபிஷேக் கேட்க, உங்க கைல இருந்த file பார்த்து நீங்க passport apply பன்ன வந்துருப்பிங்கனு I thought என்றாள். இவனும் சிரித்தவாரே, சரி வாங்க போகலாம் என்றான்.
இருவரும் passport office நோக்கி நடக்கத் தொடங்கினர். I am abhishek, may I know your name என்று தன் குரலை சற்று தாழ்த்தி கொண்டு கேட்டான்.
just the first four letters of your name என்றாள். இவ்ளோ பெரிய பேறா என்று நினைத்தவாரு abhi என்பதை புரிந்துகொண்டான்.
Passport document verificationல் அபியின் பின் நின்று கொண்டிருக்கையில் அவள் காதில் நடனமாடும் காதணிகளைப் பார்த்தவாரு சில பல கவிதைகளை தன் மனதில் எழுதிக் கொண்டான்.
A முதல் c வரை அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு passport officeஐ விட்டு வெளியேறினார்கள். புதிதாய் பழகிய பெண்னிடம் mobile number எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் அபியை bus stopற்கு அழைத்து சென்றான்.
குப்பை போல் மக்களாய் ஏற்றிச்செல்லும் பேருந்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பை போல் முன் பக்கம் ஒருவரும் பின் பக்கம் ஒருவருமாய் ஏறிச்சென்றனர்.
Passport verificationல் அபியின் கல்லூரியை தெரிந்து வைத்திருந்ததால் facebookல் easyஆக அபியை கண்டுபிடித்து request கொடுத்துவிட்டு தூங்க சென்றான்.
காலையில் எழுந்து facebook appஐ click செய்து பார்க்கையில் friend request accept செய்யப்பட்டிருந்தது. கூடவே ஒரு messageம் வந்திருந்தது “ Hi abhisek, I herewith attached my wedding invitation, you must come” என்பதை பார்த்தவுடன் பாழடைந்த பங்களா போல் மாறிய முகத்துடன் Hmm sure என்று தன் காதலுக்கு கல்லறை கட்டிவிட்டு fileஐ தூக்கி சென்றான் PAN CARD apply செய்ய.

எழுதியவர் : அருண்குமார் (27-May-16, 1:28 pm)
சேர்த்தது : அருண்குமார்
Tanglish : oru naal kaadhal
பார்வை : 977

மேலே