அடடா உங்க மொழிப்பற்றை எப்பிடி பாராட்டறதுன்னே தெரிலமா

யாருங்க சார் நீங்க?

புது ரேஷன் கார்டு தரப்போறாங்க. நா கணக்கெடுக்க வந்திருக்கேமா. இந்தாம்மா என்னோட அடையாள அட்டையைப் பாத்துக்குங்க.


ஓ....அப்பிடியா?

சரி உங்க குடும்ப வெவரத்தையெல்லாம் சொல்லுங்க.


எம் பேரு தேன்மொழி -ங்க. வயசு 35. அவரு பேரு அருள். வயசு 40.

அடடா உங்க ரணடு பேரோட பெற்றோரும் உங்களுக்கு அருமையான தமிழ்ப் பேருங்கள வச்சிருக்காங்க. அவுங்க மொழிப்பற்றை பாராட்டறமா. சரி உங்க கொழைந்களப் பத்தின வெவரத்தைச் சொல்லுங்க.

பையன் பேரு நிர்மல். வயசு 10. பொண்ணுப் பேரு அக்ஷி.வயசு 8.

அடடா உங்களப் பெத்தவங்களுக்கு அளவு கடந்த தமிழ்ப் பற்று. உங்களுக்கு உங்க கணவருக்கும் அளவில்லா இந்திப் பற்று. இப்ப யாரை அதிகம் பாராட்டறதுன்னு எனக்குத் தெரிலமா. உங்க ரண்டு பேரையுமா இல்ல உங்க பெற்றோர் தம்பதிகளயா?

நீங்க யாரையும் பாராட்டவேண்டாம்
உங்க வேல முடிஞ்சுதில்ல, போங்க சார்.


@@@#@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (27-May-16, 10:22 pm)
பார்வை : 202

மேலே