நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே - ஷண்முகபிரியா

நடிகர் ஜெமினி கணேசன் நடித்த சதாரம் (1956) என்ற திரைப்படத்தில்,
கவிஞர் மருதகாசி இயற்றிய ’நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’
என்ற பாடலை, ஜி.ராமனாதன் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன்
ஷண்முகபிரியா ராகத்தில் அருமையாகப் பாடுகிறார். யு ட்யூபில்
கேட்டும், பார்த்தும் ரசிக்கலாம்.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே (நினைந்து)

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே (நினைந்து)

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ? (எங்கிருந்து)

இந்த நிலை இன்று மாறுமோ?
இந்த நிலை இன்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ? (நினைந்து)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-16, 8:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1104

சிறந்த கட்டுரைகள்

மேலே