காதல் என்பது - 11

உள்ளத்தில் உறுதி
மனதில் தைரியம்
அறிவில் நிதானம்

இவை மூன்றையும்
பின் பற்றினால்

எதையும் சுலபமாக
வெல்லலாம்

இவர்கள் இருவரும்
ஒருவருக்கொருவர்
பார்த்தபடி

மௌன சுழலில்
அமர்ந்திருந்தனர்

சாதக பதிலும் இல்லை
நம் மீது நம்பிக்கை இல்லை

நம் எதிர்காலம் பற்றி
கவலை இல்லை

அவர்கள் வருங்காலம் பற்றி
நிறைய பயம் உண்டு

காதல் பெரும் மரியாதை இது தான்

உறவின் அளவுகோலும் இதுதான்

சுதந்திரம் நமக்கும் உண்டு
தீர்மானிக்கும் திறனும் உண்டு

அவரவர் வாழ்க்கை வாழ
மற்றவர் தயவு எதற்கு ?

என்று தன் மனம் புலம்பித் தீர்த்தாள்

ஆதங்கமும், கோபமும் கலந்து
வார்த்தைகள் வந்து வீழ்ந்தன

கோபத்தில் முகமும் சிவந்தது

பொறுமையாய் அவள் சொல் கேட்டான்

அவள் முக சிவப்பையும் ரசித்தான்

லேசாக புன்முறுவல் பூத்தான்
ஆதரவாய் தன்னோடு அணைத்தான்

அவள் மனதிற்கு அமைதியை கொடுத்தான்

அவள் காதில் மெல்ல சொன்னான்

நினைத்தது நடக்கவில்லை என்றால்
நிதானம் அவசியம் தேவை

கோபத்தை தவிர்க்க வேண்டும்

மனதிற்கு தாலாட்டுப் பாடிவிட்டு
அறிவை உசுப்ப வேண்டும்

அக்கறை என்ற சொல்லுக்கு
அர்த்தத்தை தேட வேண்டும்

நம் கனவுகள் ஜெயிக்க நாமும்
அவர்கள் கனவுகளை மதிக்க வேண்டும்

இளமையின் வேகம் நம்மிடம்
அனுபவ முதிர்ச்சி அவர்களிடம்

எதிர்மறை விஷயங்கள் சொன்னால்
மனம் ஏற்காது அது இயல்பு

தன் பேச்சை தொடர அவனும்
சிறு அவகாசம் தந்தான்

அவளும் சற்றே விலகி
அவனை கூர்ந்து பார்த்தாள்

அவன் பேச்சின் நியாயத்தை உணர்ந்தாள்

அவன் மனவோட்டத்தை கண்டு வியந்தாள்

அவன் சொல் மீண்டும் கேட்க
மீண்டும் மௌனமானாள்

பெற்றவர் மனதில் இடத்தை
நாமும் பிடிக்க வேண்டும்

விவாதம் தவிர்க்க வேண்டும்
நம்பிக்கை வளர்க்க வேண்டும்

அவர்கள் பயம் போக்க வேண்டும்
அதற்கு நாம் பாடுபட வேண்டும்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
இது யாவரும் அறிந்த சொல்லே

முயற்சி செய்து பாப்போம்
முயற்சிக்கு வெற்றி உண்டு

நம் குறிக்கோளை நம் மனதில் இருத்தி
நம் இலக்கை நாமும் அடைய

சிலவற்றை தாங்கிக் கொண்டு
பலவற்றை விட்டுக் கொடுத்து

நம் இருவரின் மன பலத்தால்
மிக எளிதாக முடித்து விடலாம்

கவலை என்ற சொல்லை
நம்மிடம் அண்டவிடாமல்

வெகு ஜாக்கிரதையாய்
நாமும் கையாள வேண்டும்

ஆனந்தம் என்ற சொல்
நம் மனதோடு கலந்திட வேண்டும்

நம் பெற்றோரை நாமும் பார்த்து
இடம் மாறி பேச வேண்டும்

என் வீடு வந்து நீயும்
அன்போடு, அளவோடு பேசு

உன்னால் அது முடியும்

பக்குவம் என்ற சொல்லை
நன்றாக பயன் படுத்திக் கொண்டு

முயற்சியில் நீயும் இறங்கு

அதே நேரம் உன் வீட்டில் நானும் இருப்பேன்

உன் பெற்றவர் மனம் நோகாமல்
அன்போடு அடக்கமும் சேர்த்து

அவர்கள் சம்மதம் பெற்று வருவேன்

அவன் வாய் மொழியை ஏற்று
அவளும் சம்மதமானாள்

இன்பம் என்ற சொல்லின்
பொருளாய் நாம் மாறவேண்டும்

அதற்கு,

என்னென்னெ செய்ய வேண்டும்
அனைத்தையும் செய்து முடிப்போம்

என்று அவனுக்கு பதிலுரை தந்தாள்

மனதில் புது தெம்பு கொண்டு
மிகத் தெளிவான சிந்தனையுடன்

அடுத்த செயல் திட்டத்தை
நோக்கி பயணிக்க தயாராயினர்

தொடரும் ..........

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (5-Jun-16, 11:51 am)
பார்வை : 90

மேலே