செந்தமிழ் நாட்டு சோலையிலே - திரைப்படப் பாடல்

சுகம் எங்கே (1954) என்ற திரைப்படத்தில், M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி இசையமைப்பில் K R ராமசாமி, சாவித்திரிக்காக, K R ராமசாமி, ஜிக்கி பாடிய ஒரு அருமையான பாடல் ‘செந்தமிழ் நாட்டு சோலையிலே’. யு ட்யூபில் கேட்கலாம். நானும் 'வாட்ஸ் அப்'பில் பாடியிருக்கிறேன்.

செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடித்திரியும் பூங்குயிலே (செந்தமிழ்)
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே (தென்றலடிக்குது)

சிந்தை கவர்ந்த ஆணழகா
உம்மால் எனது வாழ்விலே (சிந்தை)
சொந்தம் மிகுந்தது காதலின் புதுசுகமும்
என்மனம் காணுதே (சொந்தம்)
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்அமுதே இந்த வேளையிலே

அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக்கனவும் நீயே (அன்பில்)
இன்பநிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே (இன்பநிலாவே)
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் மொழியே இந்த வேளையிலே

உம்மையன்றி இங்கு இன்பமில்லை
உற்றதுணை வேறு யாருமில்லை (உம்மையன்றி)
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம் (என்னுயிரே)

இன்பதுன்பம் எதிலும்
சமபங்கு அடைந்தே நாமே (இன்பதுன்பம்)
இல்லறம் ஏதும் பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம் (இல்லறம்)
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

எண்ணி எண்ணி இந்த ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்அமுதே இந்த வேளையிலே

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-16, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 246

சிறந்த கட்டுரைகள்

மேலே