சுச்சி, அடியே சுச்சிப் புள்ள

சுச்சி, சுச்சிப் புள்ள எங்கடி போயிட்ட?
@@@@@@@@@@
@#########
#########

இதோ, நா வந்திட்டன் பாட்டி. எம் பேரு சுஜி. என்ன சுச்சி, சுச்சி -ன்னு கூப்பிட்டு மானத்தை வாங்காதீங்க.

######
நா என்னடியம்மா செய்யட்டும். உங்கப்பனும் ஆத்தாளும் பெரிய படிப்பு படிச்ச தமிழ்ப் பேராசிரியர்கள்.
இருந்தும் என்ன பிரயோசனம். சுவரொட்டில சாணியடிக்கற படிக்காத சாதாரண் சினிமா ரசிகன் மாதிரி வாயில நொழையாத இந்திப் பேர உனக்கு வச்சி உலகின் முதல் மொழி நம்ம தமிழ் மொழிதான்னு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்ங்கெல்லாம் சொல்லும் நம்ம செம்மொழியைக் கேவலப்படுத்தாறாங்களே. அரகொறப் படிப்பு படிச்சி வேலைக்குப் போனவங்களுக்கு தாய் மொழியைப் பத்தி என்னடி தெரியும்?

சரி அது பொயி தொலையுது. சுச்சி -ங்கற உம் பேருக்கு என்னடியம்மா அர்த்தம்?

@@@@@@@@@
சுஜி - ன்னா வெற்றி -ன்னு அர்த்தம் பாட்டி.

@@@@@

உங்கப்பனையும் ஆத்தாளையும் நெனச்சா எனக்கு வெக்கமா இருக்குதடி சுச்சி புள்ள. நம்ம செம்மொழியின் சிறப்பைக்கூட தெரியாம என்னத்தப் படிச்சு கிழிச்சு ரண்டு பேரும் முனைவர் (டாக்டர்) பட்டம் வாங்கினாங்களோ? அந்த முருக பெருமானுக்குத்தாம் வெளிச்சம். வெற்றி, வெற்றிச்செல்வி, வெற்றிக்கொடி, வெற்றிக்கனி, வெற்றிமலர், வெற்றிமாலை, வெற்றியமுது, வெற்றிக்கண், வெற்றிமுரசு, வெற்றிக்கனல், வெற்றிச்சுடர், வெற்றிக்கதிர் - இப்படி எத்தனையோ அழகான தமிழ்ப் பேருங்கெல்லாம் இருக்கறபோது முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் விசிலடிக்கற சினமா ரசிகர்கள் மாதிரி இந்திப் பேர வச்சு உன்னையும் நம்ம தாய் மொழியையும் அசிங்கப்படுத்திட்டாங்களே! வெக்கக் கேடு.
@@@@@@@@@@@######€€€€
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ் உணர்வை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய..
.

எழுதியவர் : மலர் (8-Jun-16, 8:49 am)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே