ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ - தர்மாவதி - ஹேமவதி

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் – மதுபாலாவிற்காக கவிஞர் வாலி இயற்றி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் S.P.பாலசுப்ரமணியம், ஜானகி பாடிய பாடல் ’ஒட்டகத்தை கட்டிக்கோ’. பாடல் காட்சிகள் நன்றாக இருந்தாலும், முதல் பத்தியில் உள்ள சொற்களும், கருத்தும் பாலுணர்வைத் தூண்டும் வரிகள். இதை இலைமறைகாய் போலச் சொல்லியிருக்கிறார் வாலி. பாடலை யு ட்யூபில் கேட்டு ரசிக்கலாம்.

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
’விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை’ (ஒட்டகத்த)

கண்ணே என்முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை (ஒட்டகத்த)

உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர்தொட்டு தருவாயோ
கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும் (ஒட்டகத்த)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-16, 10:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 639

சிறந்த கட்டுரைகள்

மேலே